கன்வார் யாத்திரை 
இந்தியா

கன்வார் யாத்திரை பாதையில் மசூதிகளுக்குப் போடப்பட்ட திரை

உத்தரகண்டில் கன்வார் யாத்திரை பாதையில் மசூதிகளுக்கு திரை போடப்பட்டுள்ளது.

DIN

வட மாநிலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற கன்வார் யாத்திரையை முன்னிட்டு, உத்தரகண்ட் மாநிலத்தில், யாத்திரைப் பாதைகளில் இருக்கும் மசூதிகள் துணிப்போட்டு மறைக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாஜக ஆளும் மாநிலங்களில் நடைபெறும் கன்வார் யாத்திரைப் பாதையில் இருக்கும் கடைகளில், உரிமையாளர்களின் பெயர்களை எழுத வேண்டும் என்பது சர்ச்சையாக, தற்போது உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்தான், உத்தரகண்ட் மாநில அரசு மற்றொரு யோசனையை முன்வைத்திருக்கிறது. வெள்ளிக்கிழமையன்று, ஹரித்வாரில் உள்ள இரண்டு மசூதிகள், மிகப்பெரிய வெள்ளை நிற துணியால் திரையிடப்பட்டு மூடப்பட்டது. அவ்வழியாக கன்வார் யாத்திரை செல்லும் என்பதால் இந்த நடவடிக்கையை அரசு எடுத்திருப்பது மிகப்பெரிய சர்ச்சையாகியிருக்கிறது.

ஜ்வாலாபுரி பகுதியில் உள்ள மசூதிகள் முன்பு, பெரிய மூங்கில் கம்பிகள் நடப்பட்டு அதன் முன்பு துணிகள் போட்டு மூடப்பட்டுள்ளது.

பிரச்னைகளைத் தவிர்க்கவும், அமைதியை நிலைநாட்டவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக உத்தரகண்ட் மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் சத்பால் மகாராஜ் தெரிவித்துள்ளார்.

ஆனால், உண்மையான பிரச்னை என்ன என்பதையும், கன்வார் யாத்திரைப் பகுதியில் இருக்கும் மசூதி எந்த வகையில் யாத்திரைக்கு இடையூறாக இருக்கிறது என்பதையும் யாரும் விளக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கு மாறாக, அமைச்சர் கொடுத்திருக்கும் விளக்கத்தில், இது ஒன்றும் அவ்வளவு பெரிய விஷயம் அல்ல, ஒரு கட்டடத்தைக் கட்டும்போதுகூட அதனை துணியால்போட்டுத்தானே மூடிவைக்கிறோம் என்றார்.

இதற்கு பலரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான நயீம் குரேஷி, தனது வாழ்நாளில் இதுபோன்றதொரு சம்பவத்தைப் பார்த்ததேயில்லை என்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்தடையைக் கண்டித்து பெண்கள் சாலை மறியல்

மீன்சுருட்டி தேசிய நெடுஞ்சாலையில் எஸ்.பி. ஆய்வு

கூட்டணி ஆட்சிக்கு அச்சாரமிடும் தவெக!

விமானத்தில் தகராறு: கீழே இறக்கிவிடப்பட்ட அதிமுக நிா்வாகி

ஓட்டுநா் அடித்து கொலை வழக்கு: ஒருவா் கைது

SCROLL FOR NEXT