முகப்பு
கோப்புப் படம்.
இந்தியா

மும்பை: திரையரங்கில் தீ விபத்து

மும்பையில் திரையரங்கு கேண்டீனில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக பரபரப்பு நிலவியது.

இந்தியா

மும்பை: திரையரங்கில் தீ விபத்து

மும்பையில் திரையரங்கு கேண்டீனில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக பரபரப்பு நிலவியது.

Updated On : 28 ஜூலை, 2024 at 12:02 PM
கோப்புப் படம்.
பகிர்:

மும்பையில் திரையரங்கு கேண்டீனில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக பரபரப்பு நிலவியது.

மத்திய மும்பையின் தாதர் பகுதியில் உள்ள சித்ரா திரையரங்கு கேண்டீனில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.15 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், திரைப்பட பார்வையாளர்கள் மற்றும் பணியாளர்களை உடனடியாக வளாகத்தைவிட்டு வெளியேறும்படி கேட்டுக்கொண்டனர்.

அதைத்தொடர்ந்து 10 நிமிடங்களில் தீயை முழுவதுமாக அவர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தீயணைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் தீ விபத்து ஏற்பட்டதற்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இருப்பினும் இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

திரையரங்கு கேண்டீனில் தீ விபத்து ஏற்பட்ட நிகழ்வு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

முழு கட்டுரையைப் படிக்க →