முகப்பு
இந்தியா

ஜம்முவில் பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க எல்லைப் பகுதிகள் சீல் வைக்கப்படும் -டிஜிபி

ஜம்மு: சர்வதேச எல்லையில் ஒவ்வொரு இன்ச் இடமும் சீல் வைக்கப்படும் -டிஜிபி உறுதி!

Updated On : 28 ஜூலை, 2024 at 4:51 PM
பகிர்:
Updated On : 28 ஜூலை, 2024 at 4:09 PM

ஜம்மு மண்டலத்தில் சர்வதேச எல்லைப் பகுதிகள் முழுவதும் ஒரு இன்ச் இடம்கூட விட்டுவிடாமல் சீல் வைக்கப்படும் என்று ஜம்மு காஷ்மீர் காவல்துறை டிஜிபி ஆர். ஆர். ஸ்வைன் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் சனிக்கிழமை(ஜூலை 27) ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் எல்லை நடவடிக்கை படைகளை இந்திய ராணுவம் முறியடித்தது. இதல் ஒரு ராணுவ வீரா் உயிரிழந்தாா். 4 வீரா்கள் காயமடைந்தனா்.

Updated On : 28 ஜூலை, 2024 at 4:36 PM

ஜம்முவில் சமீப காலமாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில், ஜம்முவில் பயங்கரவாதிகள் ஊடுருவல் முயற்சிகளை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஜம்மு காஷ்மீர் காவல்துறை டிஜிபி ஆர். ஆர். ஸ்வைன் பேசியுள்ளார்.

Advertisement

அவர் பேசியதாவது, காஷ்மீரில் பயங்கரவாதிகள் தோல்வியை சந்தித்து வருவதைத் தொடர்ந்து, அவர்கள் தங்கள் கவனத்தை ஜம்முவின் பக்கம் நகர்த்தியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரின் கிராமப் பகுதிகளில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்படும்போது அவற்றை எதிர்த்து முதலில் போராடுவது அந்தந்த பகுதிகளை சார்ந்த ‘கிராம பாதுகாப்பு குழுக்கள்(விடிஜி)’. இந்த குழுக்களில் உள்ளூர் இளைஞர்கள் சேர்க்கப்பட்டு பயங்கரவாதத் தாக்குதல்களை எதிர்கொள்ள அருகாமையில் உள்ள ராணுவ, காவல்துறை மையங்களில் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

Updated On : 28 ஜூலை, 2024 at 4:48 PM

ஜம்முவில் மலை உச்சிப் பகுதிகளில் 12 ஆண்டுகளுக்கு பின் வீரர்களை மீண்டும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தும் திட்டம் குறித்து பேசிய அவர், பயங்கரவாதிகளை அவர்கள் நுழையும் பகுதிகளில் வைத்தே தடுத்து நிறுத்த ஆயத்தமாக, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

ஜம்முவில் கடந்த 2.5 ஆண்டுகளாக எவ்வித பயங்கரவாத அச்சுறுத்தல் நடவடிக்கைகளும் நடத்தப்படவில்லை. தற்போதைய நிலவரப்படி, சுமார் 50 - 80 பயங்கரவாதிகள் ஜம்மு பிராந்தியத்திற்குள்பட்ட கத்துவா, தோடா, ரீசி, உதம்பூர் ஆகிய பகுதிகளில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

எதிர்வரும் குளிர்காலங்களில் கடுங்குளிர் காரணமாக, பயங்கரவாதிகள் ஆக்கிரமித்து பதுங்கியுள்ள பகுதிகள் 40 சதவிகிதம் முதல் 90 சதவிகிதம் வரை சுருங்கிவிடும். இதனையடுத்து கடுங்குளிரை தாக்குப்பிடிக்க முடியாமல், அவர்கள் பாகிஸ்தானுக்கே திருப்பிச்செல்ல நேரிடும். இல்லையென்றால் காஷ்மீருக்குள் நுழைய வேண்டும், ஆனால் அங்கே பாதுகாப்புப் படையினர் கட்டுப்பாடுகள் அதிகரித்திருப்பதால் அவர்களை எதிர்கொள்ள நேரிடும்.

Updated On : 28 ஜூலை, 2024 at 4:39 PM

ஜம்முவில் எல்லை தாண்டிய ஊடுருவல் முயற்சிகள் பலமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவையனைத்தும் முறியடிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், பாகிஸ்தானையொட்டிய எல்லைகளில் ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் அதிக எண்ணிக்கையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.