உச்சநீதிமன்றம் 
இந்தியா

பிகாரில் 65% இடஒதுக்கீடு ரத்து: தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

பிகார் அரசின் 65 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு தடை விதித்த பாட்னா உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு..

DIN

அரசுப் பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பல்வேறு சமூகத்தினருக்கு வழங்கப்பட்டு வந்த 50 சதவீத இடஒதுக்கீட்டை 65 சதவீதமாக உயா்த்திய பிகாா் அரசின் அரசாணையை பாட்னா உயா்நீதிமன்றம் ரத்து செய்த தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை மறுப்பு தெரிவித்துள்ளது.

தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வில் பிகார் அரசு தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், இந்த வழக்கின் இறுதி வாதத்தை செப்டம்பர் மாதத்துக்கு ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டது.

மேலும், பாட்னா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடை எதுவும் விதிக்க முடியாது என்று தெரிவித்தனர்.

பிகாா் மாநிலத்தில் கடந்தாண்டு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் அரசுப் பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப்பட்டோா் (எஸ்சி), பழங்குடியினா் (எஸ்டி), இதர பிற்படுத்தப்பட்டோா் (ஓபிசி) உள்ளிட்ட சமூகத்தினருக்கு வழங்கப்பட்டு வந்த 50 சதவீத இடஒதுக்கீட்டை 65 சதவீதமாக உயா்த்துவதாக அந்த மாநில முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான அரசு கடந்த நவம்பரில் அறிவித்தது.

இதற்கு எதிராக பாட்னா உயா்நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதன் மீதான விசாரணையின்போது, ‘பிகாா் அரசு மேற்கொண்ட சட்டதிருத்தங்கள், அரசமைப்பு சட்ட விதிகளை மீறும் வகையில் உள்ளன. எனவே, இடஒதுக்கீட்டை உயா்த்தி வழங்கும் மாநில அரசின் அரசாணை ரத்து செய்யப்படுகிறது’ என உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆம்பர் எண்டர்பிரைசஸ் பங்குகள் 8 சதவிகிதம் உயர்வு!

அமெரிக்கா: டிரக் - கார் மோதிய விபத்தில் 3 பேர் பலி! இந்தியர் மீது கடும் விமர்சனம்!

உக்ரைன் போருக்கு முடிவு? அமெரிக்க, ஐரோப்பிய, உக்ரைன் தலைவர்கள் இன்று நள்ளிரவில் சந்திப்பு!

மருத்துவமனையிலிருந்து விடியோ வெளியிட்ட நவீன் பட்நாயக்!

மன அழுத்தமா? இந்த 10 வழிகளை முயற்சி செய்யுங்கள்!

SCROLL FOR NEXT