வருகிற காலங்களில் வேலைவாய்ப்பின்மை படிப்படியாக குறையும் என்று மத்திய தொழில்துறை அமைச்சர் மக்களவையில் கூறியுள்ளார்.
மக்களவையில் இன்று (ஜூலை 29) நடைபெற்ற கூட்டத்தொடரில் பேசிய மத்திய தொழில்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, இந்தியாவில் 2017 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் வேலைவாய்ப்பின்மை 6 சதவிகிதமாக இருந்தது; தற்போது, 3.2 சதவிகிதமாக உள்ளது.
இனிவரும் காலங்களில் 3 சதவிகிதக்கும் கீழ் குறையும் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில், 2017 முதல் 2018 வரையில் தொழிலாளர் பங்களிப்பு 38 சதவிகிதத்திலிருந்து 44 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
வேலை இழப்புகள் குறித்து கவலைப்பட வேண்டிய அவசியமில்லை; வேலைகள் பற்றாக்குறையும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.