தனது பதவியை தவறாக பயன்படுத்திய புகாரில் சர்ச்சையில் சிக்கிய பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கரின் தேர்ச்சி ரத்து செய்யப்படுவதாக யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது.
பதவியை தவறாக பயன்படுத்திய முறைகேடு புகார்களில் சிக்கிய பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியான பூஜா கேத்கரின் தேர்ச்சியை, மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் ரத்து செய்துள்ளது. மேலும், வருங்காலங்களில் அவர் யுபிஎஸ்சி தேர்வெழுதவும் நிரந்தரமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு குடிமைப் பணியியல் தேர்வில் தேர்ச்சி பெற்ற பூஜா கேத்கர், தன்னுடைய ஜாதி, பெற்றோர், பார்வைத் திறன் ஆகியவற்றில் போலியாக ஆவணங்களை மாற்றி, பணியில் சேர்ந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதேபோல, மேலும் சில ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளும் மோசடி செய்து, பணியில் சேர்ந்ததாகப் புகார் கூறப்பட்டது.
இந்த நிலையில் அவர் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்திருந்தது. தனது பதவியைத் தவறுதலாகப் பயன்படுத்திய புகாரில், மகாராஷ்டிர அரசு அவரைப் பதவி நீக்கம் செய்தது. அவர் மீது முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டது.
குடிமைப் பணியியல் தேர்வில் ஊனமுற்றோர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(obc) ஒதுக்கீட்டை தவறாகப் பயன்படுத்தியதற்காக, தில்லி காவல்துறை குற்றப் பிரிவினரால் பூஜா கேத்கர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மேலும், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 420 (ஏமாற்றுதல்), 464 (போலியான ஒருவரின் பெயரில் ஆவணம் தயாரித்தல்), 465, 471, உரிமைகள் பிரிவு 89, 91 ஆகியவற்றின்கீழ் வழக்கு அவர் மீது மாற்றுத்திறனாளிகள் சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 66டி ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ளன.
2023-ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியான பூஜா, முன்பு புணே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தகுதிகாண் உதவி ஆட்சியராக பணியாற்றியவர்.
புணேவில் பணிபுரிந்த காலத்தில், பூஜா கேத்கர் தனக்குக் கிடைக்காத சலுகைகள், வசதிகளை தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அவரது தாயார் மனோரமா கேத்கர்கூட நிலத் தகராறு தொடர்பான குற்ற வழக்கில் தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.