வாக்குப்பதிவு -
இந்தியா

மக்களவைத் தேர்தல்: இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நிறைவு

மக்களவைத் தேர்தலுக்கான ஏழாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு

DIN

மக்களவத் தேர்தலில் இறுதி மற்றும் ஏழாம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது.

பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி உள்பட 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. ஏழு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 57 தொகுதிகளில் பொதுவாக அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் ஒரு சில வாக்குச்சாவடிகளில் வாக்குப் பெட்டிகளை கைப்பற்றுதல், இருவேறு கட்சித் தொண்டர்களுக்கு இடையே மோதல் உள்ளிட்ட சம்பவங்கள் நடந்தேறின.

நாட்டில் மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏழு கட்ட தோ்தல் (ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25, ஜூன் 1) கடந்த மாா்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கிய தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வாக்குப்பதிவுகள் நிறைவடைந்துள்ளன.

7-ஆம் கட்ட வாக்குப்பதிவில் பஞ்சாபில் மொத்தமுள்ள 13 தொகுதிகளுக்கும், ஹிமாசல பிரதேசத்தில் மொத்தமுள்ள 4 தொகுதிகளுக்கும், உத்தர பிரதேசத்தில் 13, மேற்கு வங்கத்தில் 9, பிகாரில் 8, ஒடிஸாவில் 6, ஜாா்க்கண்டில் 3, சண்டீகா் யூனியன் பிரதேசத்தில் ஒரு தொகுதிக்கு தோ்தல் நடைபெற்றது.

கடுமையான கோடை வெப்பம் வீசிவரும் நிலையில், இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. பெரும்பாலான தொகுதிகளில் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துள்ளனர். நீண்ட வரிசைகளில் ஆண்களும் பெண்களும் வந்து வாக்களித்த காட்சிகள் வெளியாகியுள்ளன.

இன்று நடைபெற்ற இறுதிக்கட்ட தோ்தல் களத்தில் மொத்தம் 904 வேட்பாளா்கள் இருந்தனர். பிரதமா் மோடி (வாரணாசி), மத்திய அமைச்சா்கள் அனுராக் தாக்குா் (ஹமீா்பூா்), மகேந்திர நாத் பாண்டே (சந்தெளலி), அனுப்ரியா படேல் (மிா்ஸாபூா்), ஆா்.கே.சிங் (ஆரா), முன்னாள் பிரதமா் சந்திரசேகரின் மகன் நீரஜ் சேகா் (பலியா), பாஜக மூத்த தலைவா் ரவிசங்கா் பிரசாத் (மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜியின் உறவினா் அபிஷேக் பானா்ஜி (டயமண்ட் ஹாா்பா்), முன்னாள் மத்திய அமைச்சா் ஆனந்த் சா்மா (காங்ரா), ராஷ்ட்ரீய ஜனதா தளம் லாலு பிரசாதின் மகள் மிசா பாரதி (பாடலிபுத்ரா) உள்ளிட்டோா் முக்கிய வேட்பாளா்கள் ஆவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யேமன் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: 10 பேர் பலி! 102 பேர் படுகாயம்!

கோவையில் 2,000 கிலோ வெடி மருந்துடன் வேன் பிடிபட்டது!

ரவி மோகன் தயாரிப்பு நிறுவனம்! ஒரே நேரத்தில் 3 படங்கள்!

ஆஸ்திரேலியாவில் யூத எதிர்ப்புத் தாக்குதல்களுக்கு ஈரான் அரசுதான் காரணம்: பிரதமர் அல்பானீஸ்!

கல்குவாரி பிரச்னை: ஃபார்வர்ட் பிளாக் நகரச் செயலர் குத்திக் கொலை! உறவினர்கள் மறியல்!

SCROLL FOR NEXT