அருணாச்சல் பிரதேசத்தின் இங்கியாங்கில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையம் படம் | ஏஎன்ஐ
இந்தியா

அருணாச்சலில் ஆட்சியை தக்க வைக்கிறது பாஜக..? முன்னணி நிலவரம்!

அருணாச்சல் பிரதேசம் வாக்கு எண்ணிக்கை - காலை 10 மணி முன்னணி நிலவரம்!

DIN

அருணாச்சல் பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணும் பணி இன்று(ஜூன் 2) காலை 6 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 11.30 மணியளவில் இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அருணாச்சலில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் முதல்வர் பீமா காண்டு உள்பட 10 பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து மீதமுள்ள 50 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

அருணாச்சலில் பாஜகவும், சிக்கிமில் 'சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சாவும்(எஸ்.கே.எம்)’ ஆட்சியை தக்க வைக்கும் என்று வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை 10 மணி நிலவரப்படி, அருணாச்சல் பிரதேசம் (மொத்த தொகுதிகள் 60) வாக்கு எண்ணிக்கை - முன்னணி நிலவரம்:

  • பாஜக --> 31 இடங்கள், 10 இடங்களில் வெற்றி

  • என்பிபி --> 8

  • காங்கிரஸ் --> 0

  • இதர கட்சிகள் --> 9

சிக்கிம் (மொத்த தொகுதிகள் 32) வாக்கு எண்ணிக்கை - முன்னணி நிலவரம்:

  • எஸ்.கே.எம் --> 31 இடங்கள்

  • எஸ்.டி.எஃப் --> 1 இடம்

  • பாஜக --> 0 இடம்

  • காங்கிரஸ் --> 0

  • இதர கட்சிகள் --> 0

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

மாலை மலர்ந்த ஊதா... அம்ரிதா ஐயர்!

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT