இந்தியா

7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை!

ஒடிஸாவில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்டுள்ளார்.

DIN

ஒடிஸாவில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்டுள்ளார்.

ஒடிஸாவின் குலியானா காவல்நிலைய எல்லைக்குள்பட்ட ஒரு கிராமத்தில், ஜூன் 1ஆம் தேதி மக்களவைத் தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், சிறுமி ஒருவரின் பெற்றோர் வாக்களிக்கச் சென்றபோது, வீட்டில் தனியாக இருந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொல்லப்பட்டுள்ளார்.

23 வயதான இளைஞர் ஒருவர் சிறுமியின் வீட்டிற்குச் சென்று, வீட்டில் தனியாக இருந்த சிறுமியை, அருகிலுள்ள நதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக கூறப்படுகிறது.

கிராமவாசிகள் சிறுமியின் உடலைக் கண்டுபிடித்து, அந்த இளைஞரைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அந்த இளைஞர் மீது இந்திய தண்டனை சட்டப் பிரிவு 376 (பாலியல் வன்கொடுமை) மற்றும் 302 (கொலை) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

அமித் ஷா-வை சந்திக்கக் காரணம்…: EPS விளக்கம்! | செய்திகள்: சில வரிகளில் | 17.09.25

ஜெர்மனியில் செந்தேன்... சிவாங்கி!

நட்புக்குள்ளே.... சத்யா தேவராஜன்!

பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT