இந்தியா

சிக்கிம் ஆட்சியை கலைத்தார் ஆளுநர்!

31 தொகுதிகளில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா வெற்றிபெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளது.

DIN

சிக்கிம் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி பெரும்பான்மை பெற்று இரண்டாவது முறையாக ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது.

இதன்மூலம் மாநிலத்தின் 11வது சட்டப்பேரவை கிராந்திகாரி மோர்ச்சா தலைமையில் அமையவுள்ளது. இதனால், 10வது பேரவையை கலைப்பதாக ஆளுநர் லக்‌ஷ்மன் பிரசாத் ஆச்சார்யா அறிவித்துள்ளார்.

32 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட சிக்கிம் மாநிலத்தில் இன்று (ஜுன் 2) வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் 31 தொகுதிகளில் ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி வெற்றிபெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளது.

முதல்வரிடம் இருந்து வைக்கப்பட்ட கோரிக்கையின்படியும், மே 28ஆம் தேதி நடைபெற்ற பேரவை உறுப்பினர்கள் உடனான ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவின்படியும், ஆட்சியைக் கலைப்பதாக ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனநாயக முறைப்படி 11வது சட்டப்பேரவை விரைவில் அமையும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொஞ்சும் எழிலிசையே.. அனு!

பாஜகவின் தூண்டுதலில் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார் - திருமா | Vck | TVK | Karur

திமுகவிற்கும் விஜய்க்கும் Underground dealing ஆ? - திருமா | TVK | VCK | Karur

கார்கால சிலிர்ப்புகள்... குஷி கபூர்!

அப்பாவித்தனமான முகம் ஷுப்மன் கில்லை காப்பாற்றியது: அபிஷேக் சர்மா

SCROLL FOR NEXT