கிஷோரி லால் சர்மா  
இந்தியா

அமேதி.... இது காந்தி குடும்பத்தின் வெற்றி: கிஷோரி லால்

அமேதி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கிஷோரி லால் சர்மா வெற்றி.

DIN

அமேதி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கிஷோரி லால் சர்மா வெற்றி பெற்றுள்ளார்.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. உத்தரப் பிரதேசத்திலுள்ள் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தொகுதியான அமேதி தொகுதியில், இம்முறை ராகுல் காந்திக்கு பதிலாக கிஷோரி லால் சர்மா போட்டியிட்டார். (ராகுல் காந்தி ரேபரேலியில் களம் கண்டார்)

வாக்கு எண்ணிக்கையின் முடிவில் கிஷோரிலால் சர்மா 1,62,951 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் 529037 வாக்குகள் பெற்றார்.

பாஜக சார்பில் போட்டியிட்ட நட்சத்திர வேட்பாளர் ஸ்மிருதி இரானி 3,66,086 வாக்குகளைப் பெற்றார். அதற்கு அடுத்தபடியாக பகுஜன் சமாஜ் கட்சியின் நானே சிங் செளஹான் 34005 வாக்குகளைப் பெற்றார்.

இதன்மூலம் அமேதி தொகுதியில் கிஷோரி லால் சர்மாவின் வெற்றி உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களுடன் பேசிய அவர், அமேதி தொகுதியின் வெற்றி காந்தி குடும்பத்தின்வெற்றி என்றும், அமேதி மக்களின் வெற்றி எனவும் கூறினார்.

( கிஷோரி லால் வெற்றி - தேர்தல் ஆணையம் தரப்பிலிருந்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் காலமானார்

தங்கம் விலை நிலவரம்

தில்லியில் காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் செயின் பறிப்பு

சவூதியில் 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றம்!

போரை நிறுத்தினேன்! உலகில் ஐந்து போர்களை நிறுத்தியதாக டிரம்ப் பெருமிதம்!

SCROLL FOR NEXT