முகப்பு
இந்தியா

ஹைதராபாத்தில் ஓவைசி: 3.38 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி!

ஹைதராபாத்: ஓவைசி 3.38 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி

Updated On : 4 ஜூன், 2024 at 4:14 PM
அசாதுதீன் ஓவைசி
பகிர்:

ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி 3.38 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ஹைதராபாத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

அவரது போட்டியாளரான பாஜகவின் கொம்பெல்ல மாதவி லதாவை விட 3,38,087 வாக்குகள் அதிகமாக பெற்று 5-வது தொடர் வெற்றியை ஓவைசி பதிவு செய்துள்ளார்.

நெருக்கடியான போட்டி நிலவும் எனக் கணிக்கப்பட்ட நிலையில் ஓவைசி 6,61,981 வாக்குகள் பெற்றது போட்டிக்கு இடமில்லாமல் செய்துள்ளது.

1984 முதல் ஒரு தேர்தலில் கூட வெற்றியை நழுவவிடாத ஏஐஎம்ஐஎம் கட்சியின் ஹைதராபாத் மீதான பிடியை இந்த தேர்தல் மீண்டும் உறுதி செய்துள்ளது.

பாஜக, தொழிலதிபரும் நடன கலைஞருமான மாதவி லதாவை களமிறக்கியது ஹைதராபாத் தொகுதிக்கான பரபரப்பை நாடு முழுவதும் ஏற்படுத்தியது.

பாஜக வேட்பாளர், மசூதி நோக்கி அம்பு எய்துவது போல நடந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

வாக்குப் பதிவு நாளில் இஸ்லாமிய பெண்களை புர்கா நீக்கி முகத்தை காண்பிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டதும் சர்ச்சையை உண்டாக்கியது. பல்வேறு பிரிவுகளில் மாதவி லதா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஹைதராபாத் மக்களுக்கு ஓவைசி நன்றி தெரிவித்துள்ளார். குறிப்பாக பெண்கள், இளைஞர்கள், முதல்முறை வாக்காளர்கள், முதியவர்களுக்கு நன்றி என அவர் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →