முகப்பு
இந்தியா

2 லட்சம் வாக்குகள் முன்னிலையில் ஹேம மாலினி!

மதுரா தொகுதியில் 2 லட்சம் வாக்குகள் முன்னிலையில் ஹேம மாலினி!

Updated On : 4 ஜூன் 2024, 4:45 pm IST
பகிர்:

மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடர்ந்துவரும் நிலையில் உத்தரப் பிரதேசம் மதுரா தொகுதியில் போட்டியிட்ட ஹேம மாலினி 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

வாக்கு எண்ணிக்கை மையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகையும் பாஜக வேட்பாளருமான ஹேம மாலினி வெற்றி பெறும் நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.

தொகுதிக்கான இலக்கு குறித்து கேள்வி எழுப்பியபோது நிறைய விஷயங்கள் அவருக்கு தோன்றுவதாகவும் கல்வி அமைப்பு, போக்குவரத்து சிக்கல் ஆகியவற்றில் கவனம் செலுத்தவுள்ளதாகவும் ஹேம மாலினி தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மூன்றாவது முறையாக மதுரா தொகுதியில் வெற்றியை எதிர்நோக்கியுள்ளார் நடிகை ஹேம மாலினி.

நாளின் இறுதியில் மீண்டும் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்பது உறுதி என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments