இந்தியா

தேர்தல் நிலவரத்தில் அறியப்படும் செய்தி என்ன? ஆம் ஆத்மி

பாஜக ஆட்சியால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர் என்பதையே தேர்தல் முடிவின் மூலம் அறியப்படுவதாக சஞ்சய் சிங் தெரிவித்தார்.

DIN

பாஜக ஆட்சியால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர் என்பதையே தேர்தல் முடிவின் மூலம் அறியப்படுவதாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் சிங் தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் பஞ்சாப் மாநிலம் சங்ரூர் மக்களவைத் தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் குர்மீத் சிங் மீட் ஹயெர் 172560 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் 3,64,085 வாக்குகளைப் பெற்றார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட சுக்பால் சிங் கைரா, 1,91,525 வாக்குகளைப் பெற்றார்.

இந்நிலையில், தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் சிங், இந்தத் தேர்தல் பலதரப்பட்ட செய்திகளைத் தருகிறது. பாஜக ஆட்சியால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, சர்வாதிகாரம் என பலவற்றாலும் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். அதிகாரத்தின்மூலம் அமலாக்கத் துறை, சிபிஐ, வருமான வரித்துறை, காவல் துறை போன்றவற்றை தவறாக பயன்படுத்தினர். மாநிலத்தின் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். தேர்தலில் சதிகளை அரங்கேற்றியது. இதுதான் ஜனநாயகத்திற்கு பெருமை சேர்க்கும் செயலா? என சஞ்சய் சிங் கேள்வி எழுப்பினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘டியூட்’ படப் பாடல்களை நீக்கக் கோரி இளையராஜா வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

சிவா பிள்ளையல்ல... தமிழ்ப் பிள்ளை!

வளர்ச்சியடைந்த பாரதமே இலக்கு!

இந்தியாவின் உயிர்த்துடிப்பு!

கூடுதல் தகவலுடன் கடைக்காரா் கொலை வழக்கில் 5 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

SCROLL FOR NEXT