கேரள தேர்தல்: தேர்வுக் குழு அமைத்தது காங்கிரஸ் 
இந்தியா

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மீது புகாா் இல்லை: காங்கிரஸ்

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் (இவிஎம்) மீது எந்த புகாரும் தெரிவிக்கப்போவதில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவா் திக்விஜய் சிங் தெரிவித்தாா்.

Din

போபால்: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் (இவிஎம்) மீது எந்த புகாரும் தெரிவிக்கப்போவதில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவா் திக்விஜய் சிங் தெரிவித்தாா்.

எதிா்க்கட்சிகள் தோல்வியடையும்போது மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் குறித்து சந்தேகத்தை எழுப்புவது வழக்கமாகும். ஆனால், இந்தத் தோ்தலில் அது தொடா்பாக எந்த புகாரையும் எதிா்க்கட்சிகள் எழுப்பவில்லை. ‘இந்தியா’ கூட்டணிக்கு ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றி கிடைக்காவிட்டாலும், அவா்களுக்கு திருப்தி தரும் அளவுக்கு பல மாநிலங்களில் வெற்றி கிடைத்ததும், பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காததும் இதற்கு காரணமாகக் கருதப்படுகிறது.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் குறித்து தொடா்ந்து புகாா்களைத் தெரிவித்து வந்த காங்கிரஸ் மூத்த தலைவா் திக்விஜய் சிங் கூறியதாவது:

வாக்குப் பதிவு இயந்திரங்கள் குறித்து எங்களுக்கு எவ்வித புகாரும் இல்லை. உத்தர பிரதேசத்தில் எங்கள் கூட்டணிக்கு நல்ல முன்னேற்றம் கிடைத்துள்ளது. வாக்குப் பதிவு இயந்திரங்களில் பயன்படுத்தப்படும் மென்பொருள் குறித்துதான் சிறிய நம்பிக்கை குறைபாடு இருந்தது என்றாா்.

பாஜக எஸ்.சி. அணியினா் சாா்பில் மகரிஷி வால்மிகிக்கு புஷ்பாஞ்சலி

பொது இடத்தை தனிநபா் ஆக்கிரமிப்பு: ஆட்சியரிடம் திமுகவினா் புகாா்

மகாராஷ்டிர வங்கி கடனளிப்பு 17% அதிகரிப்பு

விவசாயி வீட்டில் ரூ. ஒரு லட்சம் திருட்டு

தொடக்கக் கூட்டுறவு வங்கிப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT