இந்தியா

233 தொகுதிகளில் வெற்றி: 'இந்தியா' கூட்டணி அபாரம்

DIN

புது தில்லி: மக்களவைத் தேர்தலில் "இந்தியா' கூட்டணி 233 தொகுதிகளில் வெற்றியை உறுதி செய்துள்ளது.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 இடங்களிலும், 2014 மக்களவைத் தேர்தலில் 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில், இந்த முறை 99 இடங்களில் அதன் வெற்றி உறுதியானது. மேலும், காங்கிரஸ் அங்கம் வகிக்கும் "இந்தியா' கூட்டணி 233 தொகுதிகளில் வெற்றியை உறுதி செய்துள்ளது.

அரசியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த ஹிந்தி பேசும் மாநிலங்களில் "இந்தியா' கூட்டணி கணிசமான வெற்றியைப் பெற்றுள்ளது.

குறிப்பாக, உத்தர பிரதேசத்தில் "இந்தியா' கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைத்துள்ளன.

முன்னிலை நிலவரங்களின்படி பார்த்தால் இரவு 11.30 மணி நிலவரப்படி, இக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள சமாஜவாதி கட்சி 36 இடங்களில் வெற்றி பெற்று, ஓரிடத்தில் முன்னிலை வகிக்கிறது.

ராஜஸ்தான், ஹரியாணா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் "இந்தியா' கூட்டணி கணிசமான வெற்றியைப் பதிவு செய்துள்ளது. எனினும், மத்திய பிரதேசம், தில்லி, உத்தரகண்ட், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் இக்கூட்டணிக்கு வெற்றி கிடைக்கவில்லை.

பிகாரில் "இந்தியா' கூட்டணிக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. அங்கு ராஷ்ட்ரீய ஜனதா தளம் 4 இடங்களிலும், காங்கிரஸ் 3, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் இரு இடங்களில் முன்னிலையில் உள்ளன.

பிகாரில் கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 40 இடங்களில் 39 இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது. அப்போது பாஜக 17 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 16 இடங்களிலும், லோக் ஜனசக்தி 6 இடங்களிலும் வெற்றி பெற்றன.

ஹரியாணாவில் மொத்தமுள்ள 10 இடங்களில் காங்கிரஸýம் பாஜகவும் தலா ஐந்து இடங்களில் முன்னிலையில் உள்ளன. 2019 மக்களவைத் தேர்தலில் 10 இடங்களையும் பாஜக கைப்பற்றியது.

ஜார்க்கண்டில் "இந்தியா' கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் 3, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா இரண்டு இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. பாஜக எட்டு இடங்களில் முன்னிலையில் உள்ளது. அங்கு பாஜகவின் கூட்டணிக் கட்சியான ஏஜேஎஸ்யூ கட்சி ஓரிடத்தில் முன்னிலையில் உள்ளது.

தமிழகத்தில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் போட்டியிட்ட 9 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தில்லி காங்கிரஸ் தலைமையகத்துக்கு வந்த அக்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, ராகுல் காந்தி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்டர்நேஷ்னல் பீர் டே... திவ்ய பிரபா!

நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட தொடக்க விழா! மேடையில் M.L.A. - M.P. வாக்குவாதம்!

ஒரே ஓவரில் 45 ரன்கள்... 43 பந்தில் 153 ரன்கள் குவித்த ஆப்கன் வீரர்!

நீ கவிதைகளா.... ஜனனி!

ஆகஸ்ட் மாத எண்கணிதப் பலன்கள்!

SCROLL FOR NEXT