நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தக்கூடாது என்பதற்காகவே காந்தி, அம்பேத்கர், சிவாஜி சிலைகள் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியிருக்கிறது.
மேலும், இதுபோன்ற நடவடிக்கைகளால் எல்லாம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலா நிரந்தரமற்ற அரசு வீழ்ச்சியடைவதை நிறுத்திவிட முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இது குறித்து கூறுகையில், தலைவர்களின் சிலைகள் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதற்கு, மக்களவைச் செயலாளர் அளித்திருக்கும் விளக்கம் வெறும் மோசடி. இது குறித்து ஆளும் கட்சி, எந்த அரசியல் கட்சிகளுடனும் ஆலோசனை மேற்கொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மக்களவை செயலாளர் வெளியிட்ட விளக்க அறிக்கையில், நாடாளுமன்ற வளாகத்தில் தற்போதிருந்த சிலைகளின் அமைப்பினால், பார்வையாளர்கள் வசதியாக அவற்றை பார்வையிட இயலவில்லை. இந்த காரணத்தினால்தான், அனைத்து சிலைகளும் மிகவும் மரியாதைக்கு உரிய முறையில் பிரேர்னா ஸ்தல் என்ற இடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்விடம், நாடாளுமன்றத்தை பார்வையிட வருவோர், சிலைகளைப் பார்க்க வசதியான முறையில் மாற்றியமைக்கப்படவிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.