ஆதித்யா தாக்கரே படம்| பிடிஐ
இந்தியா

மக்களவைத் தலைவர் பதவிக்கு தெலுங்கு தேசம், ஐ.ஜ.த., உரிமை கோரலாம்! -ஆதித்யா தாக்கரே

மக்களவைத் தலைவர் பதவிக்கு தெலுங்கு தேசமும், ஐக்கிய ஜனதா தளமும் உரிமை கோரலாம் என ஆதித்யா தாக்கரே ஆலோசனை கூறியுள்ளார்.

DIN

தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசமும், ஐக்கிய ஜனதா தளமும் மக்களவையில், மக்களவைத் தலைவர் பதவியை கோரலாம் என சிவசேனை(உத்தவ் அணி) தலைவர் ஆதித்ய தாக்கரே கூறியுள்ளார்.

இதுகுறித்து சிவசேனை(உத்தவ் அணி) தலைவர் ஆதித்ய தாக்கரே வெளியிட்டுள்ள ’எக்ஸ்’ தளப் பதிவில், மத்தியில் ஆட்சி அமைக்கவுள்ள பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கும் நிமிடத்தில், தனது கூட்டணியில் உள்ள கூட்டணிக் கட்சிகளை உடைக்க முயற்சிக்கும்.

பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் புதிதாக இணைந்துள்ள கட்சிகளுக்கு ஒரு பணிவான ஆலோசனை, முடிந்தவரை மக்களைவையில், மக்களவைத் தலைவர் பதவியை பெறுங்கள். பாஜகவினர் உங்களுடன் ஆட்சி அமைக்கும் நிமிடத்தில், அவர்கள் வாக்குறுதிகளை மீறுவார்கள். உங்கள் கட்சிகளையும் உடைக்க முயற்சிப்பார்கள். நீங்கள் அதை முன்பே அனுபவித்திருப்பீர்கள்” என்று தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளையும் 'டேக்' செய்து குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவுகளை மறைமுகமாக ஆதித்ய தாக்கரே சுட்டிக்காட்டினார்.

பாஜகவுக்கு ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை இல்லாததால், நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்க, தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளத்தின் ஆதரவு முக்கியமாக உள்ளது.

மொத்தமுள்ள 543 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி 293 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. அதில் பாஜக 240 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. தெலுங்கு தேசம் கட்சி 16 இடங்களையும், ஐக்கிய ஜனதா தளம் 12 இடங்களையும் கைப்பற்றி பாஜகவுக்கு ஆதரவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளியில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் என்ன வித்தியாசம்? ரசிகை ஆவேசம்

Untitled Nov 03, 2025 10:37 pm

இறுதி வரை முன்னேறினாலும்... தென்னாப்பிரிக்காவைத் துரத்தும் சோகம்!

கொண்டாட்ட நாள்... சம்யுதா!

SCROLL FOR NEXT