முகப்பு
இந்தியா

சத்தீஸ்கரில் 7 நக்சல்கள் சுட்டுக் கொலை!

எல்லையில் மாவட்ட ரிசர்வ் குழு நடத்திய என்கவுன்டரில் 7 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Updated On : 8 ஜூன், 2024 at 7:18 AM
கோப்புப்படம்
பகிர்:

சத்தீஸ்கரில் உள்ள நாராயண்பூர், தண்டேவாடா மற்றும் கொண்டகான் ஆகிய மாவட்டங்களுக்கிடையேயான எல்லையில் மாவட்ட ரிசர்வ் குழு நடத்திய என்கவுன்டரில் 7 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

என்கவுன்டல் நடைபெற்ற இடத்திலிருந்து நக்சல்கள் ஏழு பேரின் உடல்கள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக நாராயண்பூர் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற என்கவுன்டரில் காயமடைந்த நாராயண்பூர் டிஆர்ஜியின் மூன்று காவலர்கள் கிழக்கு பாஸ்டர் பிரிவுக்கு உள்பட்ட கோபல் பகுதியிலிருந்து மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டனர்.

நாராயண்பூர், கோண்டகான், தண்டேவாடா மற்றும் ஜக்தல்பூர் ஆகிய இடங்களில் இருந்து டிஆர்ஜியின் கூட்டுக் குழு மற்றும் ஐடிபிபியின் 45வது பட்டாலியன் அபுஜ்மத் பகுதியில் மாவோயிஸ்ட்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, ​​மாவோயிஸ்டுகள் படைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

முன்னதாக ஜூன் 2ஆம் தேதி நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள துர்மி கிராமத்தில் மொபைல் டவரை நக்சலைட்டுகள் தீ வைத்து எரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →