முகப்பு
இந்தியா

நீட் ரத்து செய்யப்பட வேண்டும்: மகாராஷ்டிரத்தில் ஆளும் பாஜக கூட்டணி அரசு

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மகராஷ்டிர அரசு வலியுறுத்தல்

Updated On : 8 ஜூன், 2024 at 10:13 AM
ஏக்நாத்
பகிர்:

தங்கள் மாநில மாணவர்களுக்கு அநீதி இழைத்துவிட்டதாகக் கூறி, அண்மையில் முடிவுகள் வெளியிடப்பட்ட நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மகாராஷ்டிர அரசு வலியுறுத்தியிருக்கிறது.

மே 5ஆம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வு முடிவுகள் யாரும் எதிர்பாராத வகையில் ஜூன் 4ஆம் தேதி மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான அன்று வெளியிடப்பட்டது.

அதில் பல்வேறு குளறுபடிகள் இருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், எந்த முறைகேடும் இல்லாமல் நீட் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டிருப்பதாக, அந்த தேர்வினை நடத்தி வரும் தேர்வு முகமை வாரியம் நேற்று விளக்கம் கொடுத்திருந்தது.

இந்த நிலையில், பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைதிருக்கும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு, நடந்து முடிந்த நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மகாராஷ்டிர மாநில மருத்துவக் கல்வி அமைச்சர் ஹசன் முஷ்ரிஃப், நீட் தேர்வை பகிரங்கமாக விமரிசித்துள்ளார். இந்த தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பது தெளிவாகத்தெரிகிறது. நீட் தேர்வு முடிவுகளால், மகாராஷ்டிர மாநில மாணவர்கள் மாநிலத்துக்குள் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவக் கல்வியில் சேர்வதற்கான வாய்ப்புகளைக் குறைப்பதாகவே உள்ளது. எங்களுக்கு நீதி வேண்டும் என்று கேட்டு ஏராளமான மாணவர்களும் பெற்றோரும் அரசை நாடி வருகிறார்கள்.

மகாராஷ்டிர மாணவர்களுக்கு நடந்திருக்கும் அநீதியை ஏற்றுக்கொள்ள முடியாது. உடனடியாக தேர்வு முடிவை ரத்து செய்ய வேண்டும். இதனை தேசிய மருத்துவக் கவுன்சிலுக்கும் எடுத்துச் செல்வோம் என்று தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →