அமைச்சராக பொறுப்பேற்கும் பியூஷ் கோயல் 
இந்தியா

மீண்டும் அமைச்சரவையில் பியூஷ் கோயல்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் மீண்டும் இடம் பெற்றார் பியூஷ் கோயல்.

DIN

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் மீண்டும் இடம் பெற்றார் பியூஷ் கோயல்.

மத்திய அமைச்சராக பதவியேற்ற அவர்க்கு, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கடந்த முறை வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சராக அவர் இருந்தார்.

இதேபோன்று மத்தியப் பிரதேச மாநில முதல்வராக இருந்த சிவராஜ் சிங் செளஹான் இம்முறை மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். தொடர்ந்து மூன்றாவது முறையாக அவர் பிரதமராக பதவியேற்றுள்ளார். இதன்மூலம் தொடர்ந்து 3 முறை பிரதமராக இருந்த ஜவாஹர்லால் நேருவின் சாதனையை மோடி சமன் செய்துள்ளார்.

தில்லி குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், நாடு முழுவதும் இருந்து பாஜக கூட்டணிக் கட்சிகளின் தலைவா்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வா்கள், முக்கியப் பிரமுகா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனர்.

சர்வதேச நாடுகளின் தலைவர்கள், சினிமா, மருத்துவம், தொழில்துறைச் சேர்ந்த பிரபலங்களும் விழாவில் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காயல்பட்டினத்தில் கந்தூரி விழா

அரிவாளை வைத்து மிரட்டும் வகையில் ரீல்ஸ் வெளியிட்டவர் கைது!

கோவில்பட்டி பள்ளியில் இருபெரும் விழா

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு: பாளை சிறை கைதியிடம் டிஐஜி விசாரணை

குவஹாட்டியில் ஏழுமலையான் கோயில்: அஸ்ஸாம் முதல்வா் திருமலையில் ஆலோசனை

SCROLL FOR NEXT