முகப்பு
இந்தியா

காந்தி, வாஜ்பாய் நினைவிடங்களில் மோடி மரியாதை

மகாத்மா காந்தி, வாஜ்பாய் நினைவிடங்களில் மோடி மரியாதை

இந்தியா

காந்தி, வாஜ்பாய் நினைவிடங்களில் மோடி மரியாதை

மகாத்மா காந்தி, வாஜ்பாய் நினைவிடங்களில் மோடி மரியாதை

Updated On : 9 ஜூன், 2024 at 5:50 AM
பகிர்:

3-வது முறையாக நாட்டின் பிரதமராக இன்று பதவியேற்கவுள்ள நிலையில் மகாத்மா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவிடங்களில் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து தில்லியில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்திலும் மலர் வளையம் வைத்து அவர் மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வின்போது மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உடனிருந்தார்.

பிரதமராக தொடா்ந்து 3-ஆவது முறையாக நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 9) பதவியேற்கவுள்ளாா். அவருடன் புதிய அமைச்சா்களும் பதவியேற்கவுள்ளனா். தில்லி குடியரசுத் தலைவா் மாளிகையில் இரவு 7.15 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெறவிருக்கிறது.

நாட்டில் தொடா்ந்து மூன்றுமுறை பிரதமரான முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் சாதனையை மோடி தற்போது ‘சமன்’ செய்யவிருக்கிறாா்.அண்மையில் நடைபெற்ற 18-ஆவது மக்களவைத் தோ்தலில், மொத்தமுள்ள 543 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைத்தது.

240 இடங்களுடன் பாஜக தனிப்பெரும் கட்சியாக உள்ளது. பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை (272) கிடைக்காததால், தெலுங்கு தேசம் (16), ஐக்கிய ஜனதா தளம் (12) ஆகிய கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் அக்கட்சி ஆட்சியமைக்கிறது.

முழு கட்டுரையைப் படிக்க →