இந்தியா

வலியை வென்ற வீரம்: மத்திய அமைச்சரவையில்! மகாராஷ்டிர எம்.பி.யின் துணிச்சலான பாதை!!

மத்திய அமைச்சரவையில் ரக்‏ஷா கட்ஸே, மகாராஷ்டிர எம்.பி.யின் துணிச்சலான பாதை!!

இணையதளச் செய்திப் பிரிவு

மும்பை: ரக்‏ஷா கட்ஸே, மகாராஷ்டிரத்தின் ரேவர் தொகுதியிலிருந்து பாஜக சார்பில் போட்டியிட்டு மூன்று முறை எம்.பி.யானவர். இவர் ஞாயிற்றுக்கிழமை மத்திய அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் மத்திய இணை அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.

தனிப்பட்ட வாழ்க்கையிலிருந்து, இன்று மத்திய இணை அமைச்சராக பதவியேற்றது வரை, ரக்‏ஷாவின் திறமை, வீரம், துணிச்சல் எல்லாமே பெண்களுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்குகிறது. 2013ஆம் ஆண்டு தனது கணவரை இழந்த ரக்‏ஷா, கோத்தடி கிராம பஞ்சாயத்துத் தலைவர் பதவியிலிருந்து அரசியல் வாழ்வைத் தொடங்கினார்.

உள்ளூர் அரசியலில் கிடைத்த வெற்றி, 2014ஆம் ஆண்டு அவரை எம்.பி.யாக்கியது. தனது 26 வயதிலேயே அவர் ரேவர் தொகுதி எம்.பி.யானார். அங்கு தொடர்ந்து மூன்று முறை எம்.பி.யாகியிருக்கிறார்.

அவர் தனது கையில் இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு அரசியல் பணிகளை மேற்கொள்ளும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அவருக்கு பெரும்பாலான ஆதரவுகளை பெற்றுத்தந்தது. கணவரை இழந்து ஒற்றை பெற்றோராக பிள்ளைகளையும் கவனித்துக்கொண்டு அரசியலில் சாதிக்கத் தொடங்கிய ரக்‏ஷாவின் துணிச்சல் பலருக்கும் பிடித்துப்போனது.

மத்திய இணையமைச்சரானது குறித்து ரக்சா கூறுகையில், எனது அரசியல் வாழ்வை நான் தொடங்கியதை பின்னோக்கிப் பார்த்தால் இப்போது மத்திய இணை அமைச்சராகப் பதவியேற்றிருப்பது மிகப்பெரிய விஷயமாகவே இருக்கிறது. எனது மகளுக்கு 4 வயது, மகனுக்கு இரண்டரை வயதிருக்கும்போது கணவர் இறந்துவிட்டார். வாழ்க்கையே கேள்விக்குறியான போதுதான், என் கிராம மக்களின் ஆதரவும் அன்பும் எனக்கு புதிய வழியைக் காட்டியது.

எனது முழுத் திறனையும், நான் ஏற்றிருக்கும் பதவிக்காக உழைப்பேன் என்கிறார் தீரத்துடன்.

இதுவரை எந்தப் பதவிக்காகவும் நான் உழைக்கவில்லை. இன்று பிரதமர் நரேந்திர மோடி எனக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கியிருப்பதற்கு மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன் என்கிறார் பாஜகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஏக்நாத் கட்ஸேவின் மருமகள். ரக்‏ஷாவின் வளர்ச்சியில் ஏக்நாத் பெரும்பங்கு வகித்துள்ளார். தனது மகளை அரசியலுக்குக் கொண்டு வருவதற்கு பதில் மருமகளை அரசியலுக்குக் கொண்டு வந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிட முழு ஆதரவு தந்துள்ளார்.

தனது மருமகள் மத்திய அமைச்சரவையில்இடம் பெற்றிருப்பதற்கு மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்திருக்கும் ஏக்நாத், மகாராஷ்டிர வளர்ச்சிக்கு ரக்‏ஷாவின் உழைப்பு அதிகமாக இருக்கும் என்று உறுதியோடு நம்புவதாகவும் கூறுகிறார்.

வாக்களித்த மக்களுக்கும், மருமகளை எம்.பி.யாக்கிப் பார்த்த ஏக்நாத் நம்பிக்கைக்கும் நிச்சயம் உரியவராக இருப்பார் ரக்‏ஷா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலகக் கோப்பை: நியூசிலாந்து 231 ரன்களுக்கு ஆட்டமிழப்பு!

ஷீ மிஸ் பியூட்டி விழாவில்... தமிழ்ச் செல்வி!

தொல்லியல் அறிஞர் நடன. காசிநாதன் காலமானார்!

பிகாரில் 100 வயதைக் கடந்த வாக்காளர்கள் இத்தனை பேரா?

நாட்டின் பாலின விகிதம்: 1000 ஆண்களுக்கு 917 பெண்கள்!

SCROLL FOR NEXT