சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா தலைவர் பிரேம் சிங் தமங், சிக்கிம் முதல்வராக இன்று பதவியேற்றுக் கொண்டார்.
சிக்கிம் ஆளுநர் லஷ்மண் பிரசாத் ஆச்சார்யா, பிரேம் சிங் தமங்குக்கு பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
முதல்வா் தமங் மற்றும் அவரது அமைச்சரவையில் இடம்பெறும் புதிய அமைச்சா்களின் பதவியேற்பு விழா பால்ஜோா் மைதானத்தில் நடைபெற்றது. 56 வயதாகும் தமங், சிக்கிம் மாநிலத்தின் முதல்வராக தொடர்ந்து இரண்டாவது முறையாக பதவியேற்றுக்கொண்டுள்ளார்.
சிக்கிமில் மக்களவைத் தோ்தலுடன் பேரவைத் தோ்தலும் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி நடத்தப்பட்டது. மொத்தமுள்ள 32 பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் கடந்த ஜூன் 2-ஆம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் 31 இடங்களைக் கைப்பற்றி, ஆளும் எஸ்கேஎம் கட்சி அமோக வெற்றி பெற்றது.
பிரதான எதிா்க்கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணிக்கு (எஸ்டிஎஃப்) ஓரிடம் மட்டுமே கிடைத்தது. கடந்த 2019-ஆம் ஆண்டு வரை மாநிலத்தை தொடா்ந்து 25 ஆண்டுகள் ஆட்சி செய்த இக்கட்சியின் தலைவா் பவன் குமாா் சாம்லிங், தான் போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் தோல்வியடைந்தாா். தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, எஸ்கேஎம் கூட்டணியிலிருந்து பிரிந்து தனித்துப் போட்டியிட்ட பாஜகவுக்கும் ஓரிடம்கூட கிடைக்கவில்லை.
சிக்கிமில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதியில் எஸ்கேஎம் வெற்றி பெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.