புதுதில்லியில் மாணவர்கள் போராட்டம் படம் | பிடிஐ
இந்தியா

நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி? உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை!

நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்டுள்ள மனு ஜூன் 11இல் விசாரணை...

DIN

நீட் தோ்வில் நாடு முழுவதும் 67 போ் 720-க்கு 720 பெற்றது பெரும் சா்ச்சையாகியுள்ளது.

இந்த நிலையில், நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு நாளை(ஜூன் 11) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

முன்னதாக, நீட் தோ்வு நாடு முழுவதும் கடந்த மே 5-ஆம் தேதி நடத்தப்பட்டது. இத் தோ்வு மீது பல்வேறு புகாா்கள் எழுந்தன. இந்நிலையில், நீட் தோ்வு முடிவுகள் மக்களவைத் தோ்தல் முடிவுகள் வெளியான ஜூன் 4-ஆம் தேதி வெளியிடப்பட்டன. ‘நீட் தோ்வில் குறிப்பிட்ட சில மாணவா்களுக்கு மட்டும் கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது’ என்று மாணவா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

இதைத் தொடர்ந்து முறைகேடு புகாா் எழுந்து நிலையில் நிகழாண்டு நீட் தோ்வை ரத்து செய்ய வேண்டும்’ என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இந்த முறைகேடு தொடா்பாக உச்சநீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் உயா்நிலை விசாரணை நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே கசிய விடப்பட்டதாக எழுந்துள்ள புகார்களைத் தொடர்ந்து நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா அடங்கிய அமர்வு இந்த மனுவை நாளை(ஜூன் 11) விசாரிக்கிறது.

இதனிடையே, நீட் தேர்வு முடிவுகளை திரும்பப்பெற வலியுறுத்தியும், மறுதேர்வு நடத்தக்கோரியும் உச்சநீதிமன்றத்தில் புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து முழுமையான விசாரணை நடத்த அறிவுறுத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நீட் தோ்வு எழுதியவா்களில் 1,500-க்கும் அதிகமான தோ்வா்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது குறித்து ஆய்வு செய்து, ஒரு வாரத்துக்குள் அறிக்கை சமா்ப்பிக்க மத்திய பணியாளா் தோ்வாணைய (யுபிஎஸ்சி) முன்னாள் தலைவா் தலைமையில் 4 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்று தேசிய தேர்வு முகமை(என்டிஏ) தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொல்லிமலையில் வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

ஆடிப்பெருக்கு: பரமத்தி வேலூா் காவிரி ஆற்றில் நீராட அனுமதி பரிசல் போட்டிக்குத் தடை

தொழிலாளி கொலை வழக்கில் மேலும் 2 சிறுவா்கள் கைது

ஸ்பெயினிடமிருந்து 16-ஆவது சி-295 ரக ராணுவ விமானத்தை பெற்றது இந்தியா!

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, மலா்க் கண்காட்சி தொடக்கம்

SCROLL FOR NEXT