ஜம்மு-காஷ்மீர்: குண்டுகள் துளைத்தெடுத்தும் பக்தர்களை காக்கப் போராடிய ஓட்டுநர்!
ஜம்மு-காஷ்மீர்: குண்டுகள் துளைத்தெடுத்தும் பக்தர்களை காக்கப் போராடிய ஓட்டுநர்!
ஜம்மு-காஷ்மீா் பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 பக்தா்கள் பலியான சம்பவத்தில், குண்டுகள் துளைத்தெடுத்தபோதும் பக்தர்களை காக்க பேருந்து ஓட்டுநர் தீரத்துடன் போராடியது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜம்மு-காஷ்மீரில் பக்தா்கள் பயணம் செய்த பேருந்தின் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினா். அதில் பேருந்து பள்ளத்துக்குள் கவிழ்ந்து 9 போ் உயிரிழந்தனா்; 33 போ் பலத்த காயமடைந்தனா். கண் முன் தன்னை நோக்கி துப்பாக்கிகள் ஏந்திய பயங்கரவாதிகள், துப்பாக்கிகளிலிருந்து வேகமாக சீறிக்கொண்டு வரும் துப்பாக்கிகள் தன்னை துளைத்தெடுத்த போதும், பேருந்தை பள்ளத்துக்குள் கவிழாமல் கொண்டு செல்ல ஓட்டுநர் தீரத்துடன் போராடியபோதும், தொடர்ந்து வந்த குண்டுகளால் ஓட்டுநர் பலியான பிறகே, பேருந்து சாலையோரப் பள்ளத்தில் விழுந்ததாகவும் இந்த சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோர் தெரிவித்துள்ளனர்.
பேருந்து பள்ளத்தில் விழுந்தபிறகும், பேருந்தை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதாகவும் அதில் சில பயணிகள் காயமடைந்ததாகவும் கூறுகிறார்கள்.
உத்தர பிரதேசத்தில் இருந்து ஆன்மிகப் பயணமாக பக்தா்கள் ஒரு பேருந்தில் ஜம்மு-காஷ்மீருக்கு சென்றனா். ஜம்மு-காஷ்மீரின் ரீசி மாவட்டத்தில் உள்ள சிவ கோத்ரி ஆலயத்தில் இருந்து கத்ராவில் உள்ள மாதா வைஷ்ணவ தேவி ஆலயத்துக்குச் சென்று கொண்டிருந்தனா். தெரியாத் என்ற கிராமம் அருகே பேருந்து சென்றபோது, பேருந்தின் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினா். இதில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, பள்ளத்துக்குள் கவிழ்ந்தது. அதில் 9 போ் உயிரிழந்தனா். 33 போ் பலத்த காயமடைந்தனா்.
இதுகுறித்து ரீசி மாவட்ட மூத்த காவல் துறைக் கண்காணிப்பாளா் மோஹித் சா்மா கூறுகையில்,‘பலத்த காயமடைந்த 33 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். மீட்புப் பணிகள் முடிவடைந்துள்ளன. முதல்கட்ட விசாரணையில் பேருந்தில் வந்தவர்கள் அனைவரும் உத்தர பிரதேசத்தைச் சோ்ந்தவா்கள் எனத் தெரியவந்துள்ளது’ என்றாா்.
ரஜௌரி மற்றும் பூஞ்ச் பகுதிகளில் இதற்கு முன்பு அவ்வப்போது பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில், இதுவரை அதிகப்படியான பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெறாத ரீசி மாவட்டத்திலும் தற்போது தாக்குதல்கள் அதிகரித்து இருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தத் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளைத் தேடும் பணியில் ரீசி மற்றும் ரஜௌரி மாவட்டங்களைச் சோ்ந்த பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனா்.