முகப்பு
இந்தியா

தில்லிக்கு நீர் திறந்துவிட மறுக்கிறது ஹரியாணா: அதிஷி

தில்லிக்கு தேவையான தண்ணீரை திறந்துவிடாமல் ஹரியாணா அரசு முறைகேடாக நீரை நிறுத்திவைப்பதாக அமைச்சர் அதிஷி குற்றம் சாட்டியுள்ளார்.

Updated On : 11 ஜூன், 2024 at 12:03 PM
செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் அதிஷி
பகிர்:

தில்லிக்கு தேவையான தண்ணீரை திறந்துவிடாமல் ஹரியாணா அரசு முறைகேடாக நீரை நிறுத்திவைப்பதாக அமைச்சர் அதிஷி குற்றம் சாட்டியுள்ளார்.

தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தில்லி மக்களின் அன்றாட தேவைக்கும் குறைவான தண்ணீரையே ஹரியாணா அரசு திறந்து விடுகிறது. தில்லி அரசுக்கு போதிய அளவு தண்ணிர் திறந்துவிடுவதாக உச்சநீதிமன்றத்தில் பொய்யான அறிக்கையை ஹரியாணா அரசு அளித்துள்ளது.

ஹரியாணா அரசு சார்பில் அளிக்கப்பட்ட அறிக்கையிலுள்ள தரவுகள் பொய்யானவை என்பது, தற்போது தில்லிக்கு திறந்துவிடப்படும் தண்ணீர் அளவின் மூலம் அறியலாம்.

தில்லியில் மக்களவைத் தேர்தலையொட்டி மே 23ஆம் தேதி தில்லுக்கு திறந்துவிடப்படும் நீரின் அளவு ஹரியாணா அரசால் குறைக்கப்பட்டது. தில்லியில் மே 25ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதற்கு நான்கு நாள்கள் முன்பு தில்லிக்கு திறந்துவிடப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டது.

ஹரியாணா அரசின் இந்த போக்கால், தில்லி மக்களுக்கு 40 - 45 மில்லியன் கேலன்கள் நீர் பற்றாக்குறையாகிறது. தில்லியிலுள்ள நீர்வழித்தட பழுப்புகளில் கசிவு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →