கட்டணம் கேட்டதால் சுங்கச் சாவடியை இடித்த புல்டோசர் ஓட்டுநர்!
தில்லி - லக்னெள நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஹாபூர் சுங்கச் சாவடியில்...
உத்தரப் பிரதேச மாநிலத்தில் புல்டோசர் ஓட்டுநரிடம் கட்டணம் கேட்டதால் சுங்கச் சாவடியை இடித்து தரைமட்டமாக்கி உள்ளார்.
தில்லி - லக்னெள நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஹாபூர் சுங்கச் சாவடி வழியாக செவ்வாய்க்கிழமை காலை புல்டோசர் வாகனம் வந்துள்ளது.
சுங்கச் சாவடியை கடக்க கட்டணம் கேட்கப்பட்டதால் ஆத்திரமடைந்த ஓட்டுநர், புல்டோசரை கொண்டு சுங்கச் சாவடியை இடித்து தரைமட்டமாக்கி உள்ளார்.
Advertisement
Advertisement
இந்த சம்பவத்தில் வாகனங்கள் செல்லும் இரண்டு வழித்தடங்கள் முற்றிலும் சேதமடைந்த நிலையில், உயிரைக் காப்பாற்றிக் கொள்ள சுங்கச் சாவடி ஊழியர்கள் அங்கிருந்து தப்பித்து ஓடினர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், சிசிடிவி கேமிரா காட்சிகளை கைப்பற்றி புல்டோசர் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
கடந்த சில நாள்களுக்கு முன்னதாக இதே ஹாபூர் சுங்கச் சாவடியில் கட்டணம் செலுத்தாமல் அதிவேகமாக காரை இயக்கியதில், சுங்கச் சாவடியின் ஊழியர் படுகாயமடைந்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.