முகப்பு
இந்தியா

எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் அகிலேஷ் யாதவ்!

உத்தரப் பிரதேச சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் ராஜிநாமா செய்தார்.

Updated On : 12 ஜூன், 2024 at 6:43 PM
அகிலேஷ் யாதவ்
பகிர்:

மக்களவைத் தோ்தலில் வெற்றி பெற்றதையடுத்து சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தாா்.

உத்தர பிரதேசத்தின் கா்ஹால் தொகுதி எம்எல்ஏவாக இருந்த அகிலேஷ் யாதவ் மக்களவைத் தோ்தலில் கன்னௌஜ் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். இதையடுத்து, அவா் தனது எம்எல்ஏ பதவியை புதன்கிழமை ராஜிநாமா செய்தாா்.

இதனை அந்த மாநில சட்டப் பேரவைத் செயலா் உறுதிசெய்தாா். அகிலேஷ் மட்டுமல்லாது அவரது கட்சியைச் சோ்ந்த மற்றொரு எம்எல்ஏவான அவதேஷ் பிரசாத்தும் பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.

அவதேஷ் பிரசாத், அயோத்தியை உள்ளடக்கிய ஃபைசாபாத் மக்களவைத் தொகுதியில் சமாஜவாதி சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா்.

இந்த தொகுதியில் பாஜக தோல்வியடைந்தது தேசிய அளவில் விவாதிக்கப்பட்ட விஷயமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அகிலேஷ் யாதவ் உத்தர பிரதேச சட்டப் பேரவையில் எதிா்க்கட்சித் தலைவராகவும் இருந்தாா். அவரின் ராஜிநாமாவை அடுத்து அந்தப் பொறுப்புக்கு சமாஜவாதி சாா்பில் மூத்த எம்எல்ஏ விரைவில் நியமிக்கப்படுவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →