நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜூன் 22ல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் 
இந்தியா

ஜூன் 22ல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்!

53வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறுகிறது.

DIN

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டம் தலைநகர் தில்லியில் ஜூன் 22-ம் தேதி நடைபெறுகிறது.

கடந்த 2023 அக்டோபரில் நடைபெற்ற கடைசி கூட்டத்திற்குப் பிறகு, இந்தாண்டில் முதல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இதுவாகும். 53வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஜூன் 22 அன்று புது தில்லியில் நடைபெறும் என ஜிஎஸ்டி கவுன்சிலின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு முறையைக் கொண்டுவரும் நோக்கத்தில் கடந்த 2017ல் ஜூலையில் புதிய சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) அறிமுகம் செய்யப்பட்டது. இதைக் கண்காணிக்கவும் வட்டி நிர்ணயம் தொடர்பான முடிவுகளை எடுக்கவும் ஜிஎஸ்டி கவுன்சில் அமைக்கப்பட்டது.

பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி பொறுப்பேற்றதும் ஜூன் 12ல் மத்திய நிதியமைச்சராக மீண்டும் நிர்மலா சீதாராமன் பதவியேற்றுக் கொண்டார்.

இந்த நிலையில் 53வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அரினா சபலென்கா மீண்டும் சாம்பியன்!

சென்னையில் திடீர் மழை! மணலி புதுநகரில் 92 மி.மீ. மழைப் பதிவு!

எண்ணிலடங்கா நினைவுகளுடன் தாயகம் திரும்புகிறேன்! - முதல்வர் ஸ்டாலின்

சொல்லப் போனால்... இன்னும் கொஞ்சம் இறக்கி வையுங்கள்!

செல்வம் சேரும் சிம்மத்துக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT