ஆதிச்சநல்லூரில் கலாசார மையம் அமைக்கப்படும்!
மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் தெரிவித்ததாவது:
ஆதிச்சநல்லூரில் கலாசார மையம் அமைக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
2026-27-ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று (பிப். 1) தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
அவர் பேசுகையில், ”தமிழ்நாட்டின் பொதிகை மலை, ஹிமாசல், உத்தரகண்ட், ஜம்முவில் மலையேற்றத்தை ஊக்குவிக்க திட்டம் கொண்டுவரப்படும்.
Advertisement
Advertisement
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர் தொல்லியல் தளம், உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்படும். கலாசார செழுமையை விளக்கும் வகையில் கலாசார மையம் உருவாக்கப்படும்.
நாடு முழுவதும் 15 தொல்லியல் தளங்கள் சுற்றுலாத் தளமாக மேம்படுத்தப்படும். பழவேற்காடு ஏரியில் பறவைகளை பார்வையிடும் சுற்றுலாவை ஊக்குவிக்க திட்டம் செயல்படுத்தப்படும்” என்றார்.
Finance Minister Nirmala Sitharaman has announced in the Union Budget that a cultural center will be established in Adichanallur.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.