முகப்பு
இந்தியா

கொலை வழக்கு: நடிகர் தர்ஷன் கைது பின்னணியில் பொறியாளராக இருந்து காவலரான ஹீரோவின் கதை!

கன்னட நடிகர் தர்ஷன் கைது பின்னணியில் பொறியாளராக இருந்து காவலரான கதாநாயகன்.

Updated On : 14 ஜூன், 2024 at 7:09 AM
கன்னட நடிகர் தர்ஷன்
பகிர்:

பெங்களூரு: ஒரு நடிகரின் தீவிர ரசிகன் கொலை செய்யப்பட்ட, இந்த வழக்கில், அந்த நடிகரே கொலைக் குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டதன் பின்னணியில், பொறியாளராக இருந்து காவலரான கதாநாயகனின் கதை இருக்கிறது.

சமூக வலைதளங்களில் ஆபாச பதிவுகளைப் பதிவிட்டவரைக் கடத்திக் கொலை செய்த வழக்கில் கன்னட நடிகா் தா்ஷன், நடிகை பவித்ரா கௌடா உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஒரு ரசிகர் கொல்லப்படுகிறார். சினிமா பாணியில் மிகவும் சவாலான இந்த கொலை வழக்கில், மிக சாமர்த்தியமாக துப்பு துலக்கிய காவல்துறையினர், கன்னட நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா உள்ளிட்டவர்களைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த வழக்கில் முக்கிய கதாநாயகனாக இருந்திருப்பவர் காவல்துறை துணை ஆணையர் கிரிஷ் என்று தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இவருடன் விஜயநகரம் - காவல்துறை உதவி ஆணையர் சாந்தன் குமாரும் இணைந்துள்ளார்.

அதாவது, ரேணுகாசாமி கொலை வழக்கில், நான்கு பேர் நேராக காவல்நிலையம் வந்து சரணடைகிறார்கள். வழக்கமாக என்ன நடந்திருக்கும். அவர்கள் கொலை குற்றவாளிகள் என்று வழக்கு முடிக்கப்பட்டிருக்கலாம். ஆனால், காவல் ஆணையர் கிரிஷ் அவ்வாறு இல்லை. காரணம், இதுபோன்று சரணடையும் விவகாரங்கள் ரௌடிகளின் கொலையின்போதுதான் நடக்கும். ஆனால், ரேணுகாசாமியோ ரௌடி அல்ல.

எனவே, கிடைத்த நால்வரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ரேணுகாசாமிக்கும் இந்த நால்வருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் சிறைக்குச் செல்ல பெரிய தொகை வழங்கப்படுவதாக பேரம் பேசப்பட்டுள்ளது. அப்போது அந்தப் பணத்தைக் கொடுக்க முன்வந்தது யார் என்பதுதான் கேள்வியானது. ஒருபக்கம் அவர்களுக்கு பணம் கொடுக்க முன் வந்த வினாய் பற்றி விசாரணையும், மறுபக்கம், காவல்நிலையத்துக்கு போன் செய்து சரணடைவதற்கான விவரங்களை கேட்டவரின் விவரங்களும் அலசப்பட்டது.

விசாரணையில்தான் வினய், நடிகர் தர்ஷனின் நெருங்கிய உதவியாளர் என்பது தெரிய வந்தது. வினய்யை காவல்துறை சுற்றிவளைத்து. பிறகு குற்றம் நடந்தது எப்படி என அனைத்தும் வெளிச்சத்துக்கு வந்தது.

கன்னட திரையுலகில் கரியா, கிராந்திவீரா சங்கொள்ளி ராயண்ணா, கலாசிபாளையா, கஜா, நவகிரஹா, புல்புல், யஜமானா, ராபா்ட், காலாரே உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து புகழ்பெற்றவா் நடிகா் தா்ஷன். இவா், சித்ரதுா்காவைச் சோ்ந்த ரேணுகாசாமி (33) என்பவரைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றத்தின் பின்னணி?

இதுகுறித்து பெங்களூருவில் மாநகர காவல் ஆணையா் பி.தயானந்தா கூறுகையில், நடிகா் தா்ஷன் (46) ஏற்கெனவே விஜயலட்சுமி என்பவரைத் திருமணம் செய்துள்ளாா். இந்நிலையில், அவா், நடிகை பவித்ரா கௌடா (35) என்பவருடன் நெருக்கமாகப் பழகி வந்தாா். இதுகுறித்து அறிந்துகொண்ட நடிகா் தா்ஷனின் ரசிகா் ரேணுகாசாமி பவித்ரா கௌடா குறித்த ஆபாசப் பதிவுகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்துள்ளாா்.

தர்ஷன் தனது மனைவியைப் பிரியக் காரணமே பவித்ரா தான் என்றும், பவித்ரா தர்ஷனிடமிருந்து விலக வேண்டும் என்றும் தொடர்ந்து கருத்துகளை பதிவிட்டு வந்துள்ளார். இந்த நிலையில்தான் அவர் கொலை செய்யப்பட்டார்.

கைதானது எப்படி?

இந்த கொலையில், தர்ஷன் ரசிகர் மன்ற தலைவர் ஒருவர் கைதாக, அவரிடம் நடத்திய விசாரணையில் மெல்ல மர்ம முடிச்சு விலகத் தொடங்கியது. ரசிகர் மன்றத் தலைவர் மூலம் ஆள்களை அமர்த்தி, தர்ஷன்தான், ரேணுகாசாமியை கடத்திக் கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. குற்றம் நடந்த இடத்தில், தர்ஷனும் பவித்ராவும் இருந்த சிசிடிவி காட்சிகளும் கிடைத்துள்ளன. அதேவேளையில், தர்ஷனின் செல்போன் எண்ணும், அங்கிருக்கும் நெட்வொர்க்கில் தொடர்புகொள்ளப்பட்டதும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்தே தர்ஷன், பவித்ரா கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவப் பகுதிக்குள் தர்ஷன் வாகனம் வந்த சிசிடிவி காட்சிகளையும் காவல்துறையினர் கைப்பற்றியிருக்கிறார்கள். அதேவேளையில், பலியான ரேணுகாசாமியின் சமூக வலைத்தளப் பக்கத்தில் இருந்து பவித்ராவுக்கு மோசமான செய்திகளும் புகைப்படங்களும் அனுப்பப்பட்டிருப்பதையும் காவல்துறை உறுதி செய்திருக்கிறது.

கன்னட திரையுலகில் தர்ஷன் தந்தை, சகோதரர் எல்லோருமே மிக முக்கிய பிரபலங்களாக இருந்த நிலையில், அவரும் பெரிய அளவில் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருந்தார். கடந்த காலங்களிலும் அவர் பல சர்ச்சைகளுக்குள் சிக்கியிருந்த நிலையில், தற்போது கொலை வழக்கில் கைதாகியிருக்கிறார்.

தர்ஷனும், பவித்ராவும், சிலா் உதவியுடன் ரேணுகாசாமியை சித்ரதுா்காவில் இருந்து மைசூரில் உள்ள ஒரு கொட்டகைக்குக் கடத்திவந்தனா்; அங்குவைத்து அவரைக் கொலை செய்துள்ளனா். பின்னா் உடலை பெங்களூருவுக்குக் கொண்டுவந்து, காமாக்ஷிபாளையாவில் உள்ள மழைநீா் கால்வாயில் வீசிச் சென்றுள்ளனா். அப்போது இதைக் கண்ட குடியிருப்புக் காவலா் போலீஸாருக்கு தகவல் தந்ததால், குற்றவாளிகள் கைதாகியிருக்கிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →