கேரளத்தின் திருச்சூர் மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் சில பகுதிகளில் லேசான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுதொடர்பாக தேசிய நிலஅதிர்வு மையம் வெளியிட்ட தகவலில்,
இன்று காலை 8.15 மணியளவில் இப்பகுதியில் 3.0 ரிக்டர் அளவுகோலில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது நான்கு வினாடிகள் உணரப்பட்டதாக திருச்சூர் மாவட்ட அதிகாரிகள் பிடிஐ செய்தி நிறுவத்திடம் தெரிவித்தனர்.
நிலநடுக்கத்தினால் சேதமோ, காயமோ எதுவும் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை. நிலநடுத்தின் மையம் அட்சரேகை வடக்கில் 10.55 ஆகவும் தீர்க்கரேகை 76.05 கிழக்கிலும், இதன் ஆழம் 7 கி.மீட்டர் ஆகவும் இருந்தது.
இதற்கிடையில், குன்னம்குளம், எருமப்பட்டி மற்றும் பழஞ்சி பகுதிகளிலும் பாலக்காடு மாவட்டத்தின் சில பகுதிகளிலும் நிலஅதிர்வு உணரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாநில புவியியல் துறை அதிகாரிகள் மற்றும் பலர் சம்பவத்தை மேலும் ஆய்வு செய்வதற்காக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.