காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம்: மக்கள் அச்சம்
காஷ்மீர் பள்ளத்தாக்கின் சில பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர்.
காஷ்மீர் பள்ளத்தாக்கின் சில பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள ஸ்ரீநகர் மற்றும் அதை ஒட்டிய வடக்கு காஷ்மீர் பகுதிகளில் திங்கள்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.6ஆகப் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கமானது பட்டான் பகுதியை மையமாகக் கொண்டிருந்தது.
ஸ்ரீநகர், பாரமுல்லா, சோபூர், காண்டர்பால், புல்வாமா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் சில பகுதிகளுக்கும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. திடீர் நிலநடுக்கத்தால் உள்ளூர்வாசிகள் அதிர்ச்சியடைந்ததாகவும், பலர் பயத்தில் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியதாகவும் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement
பல இடங்களில் ஜன்னல்கள், கதவுகள் மற்றும் வீட்டுப் பொருட்கள் சப்தத்தில் அதிர்ந்தன. அதிகாலை நேரங்களில் தூங்கிக் கொண்டிருந்தபோது நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்களிடையே பதற்றம் அதிகரித்தது. இருப்பினும், நிலநடுக்கத்தால் இதுவரை எந்த சேதமும் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
The tremor occurred at 5.35 am, officials said, adding that the Pattan area was the epicenter.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.