முகப்பு
கோப்புப் படம்
இந்தியா

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது!

உத்தரப் பிரதேசத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது

இந்தியா

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது!

உத்தரப் பிரதேசத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது

Updated On : 15 ஜூன், 2024 at 7:17 AM
கோப்புப் படம்
பகிர்:

உத்தரப் பிரதேசத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள பல்லியா மாவட்டத்தில் 12 வயது சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த நிதேஷ் சிங் (19) என்பவர் பாலியல் துன்புறுத்தி, தாக்கியுள்ளார். தாக்கியது மட்டுமின்றி, ”யாரிடமும் சொன்னால் கொன்று விடுவேன்” என கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

இதனையறிந்த சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், ஜூன் 10ஆம் தேதி நிதேஷ் சிங் மீது ஐபிசி மற்றும் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, நிதேஷ் சிங் நேற்று (ஜூன் 14) பல்லியா மாவட்டத்தின் ரயில் நிலையத்திற்கு அருகே கைது செய்யப்பட்டு, உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

இதன் பின்னர், நிதேஷ் சிங் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →