இந்தியா

இன்சுலின் என்ற பெயரில் ஹோமியோபதி மருந்தா?

சர்க்கரை நோய்க்கு எவ்விதத்திலும் தொடர்பு இல்லாத, இன்சுலின் என்று பெயரிட்ட ஹோமியோபதி மருந்து சந்தையில் விற்கப்படுகிறது.

DIN

சர்க்கரை நோய்க்கு எவ்விதத்திலும் தொடர்பு இல்லாத, இன்சுலின் என்று பெயரிட்ட ஹோமியோபதி மருந்து சந்தையில் விற்கப்படுகிறது.

இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் தெளிவாக அறிவுறுத்தியிருந்த போதிலும், இந்த மருந்து நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் ஆயுஷ் அமைச்சகமும் ராஜஸ்தான் அரசும் காலம் தாழ்த்தி வருகின்றன.

இந்தப் பிரச்னை குறித்து ஆர்டிஐ ஆர்வலர் டாக்டர் கே.வி. பாபு முதன்முதலில் கடந்த ஜனவரி மாதம் பேசினார். இந்த ஹோமியோபதி மாத்திரையானது, எவ்வாறு சர்க்கரை நோயாளிகளின் உண்மையான இன்சுலினை தடுத்து நிறுத்தி, குழப்பம் விளைவிக்கிறது என்பது குறித்து இந்திய மருந்து கட்டுப்பாட்டுகள் ஆணையத்துக்கு கடிதம் எழுதினார்.

டாக்டர் பாபுவின் கூற்றுப்படி, இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் தெளிவாக அறிவுறுத்தியிருந்த போதிலும், இந்த மருந்து நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் ஆயுஷ் அமைச்சகமும் ராஜஸ்தான் அரசும் கடந்த சில மாதங்களாக காலம் தாழ்த்தி வருவதாக தெரிவித்தார்.

டிசிஜிஐ(DCGI) மருந்துகள் மற்றும் அழகுசாதன சட்டத்தை மீறி, சட்டவிரோதமாக விற்கப்படும் இன்சுலின் மாத்திரைகள் குறித்து எனது புகார்கள் இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையத்திடம் ஐந்து மாதங்களாகவும், மத்திய ஆயுஷ் அமைச்சகத்திடம் நான்கு மாதங்களாகவும் மற்றும் ராஜஸ்தான் ஹோமியோபதி இயக்குநரிடம் மூன்று மாதங்களாகவும் நிலுவையில் உள்ளன.

ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று இந்திய மருத்துவ சங்கத்தின் (IMA) மத்திய குழு உறுப்பினரான பாபு கூறினார்.

மருந்து நிறுவனம், இந்த பிரச்னையை தீர்ப்பதற்கு பதிலாக ராஜஸ்தானின் உரிமம் வழங்கும் அதிகாரியால், 'உரிமம் பெற்ற மருந்து' என்ற அனுமதியை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஹோமியோபதி மாத்திரை உரிமம் பெற்றதா அல்லது இல்லையா என்பது எனது விவாதம் அல்ல, ராஜஸ்தான் மாநில உரிமம் வழங்கும் அதிகாரியால் தவறாக அனுமதி வழங்கப்பட்டு இருந்தால் அதை திருத்துவது அவர்களின் பொறுப்பாகும் என்று கேரளத்தை சேர்ந்த பாபு தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மயானத்துக்கு சடலம் கொண்டு செல்ல எதிா்ப்பு: உறவினா்கள் சாலை மறியல்

ஜூலையில் யமுனை நீரின் தரத்தில் மேம்பாடு: அமைச்சா் சிா்சா

மழை: நெல் மூட்டைகள் நனைந்து சேதம்!

இரு இடங்களில் கஞ்சா விற்ற மூவா் கைது

நாளைய மின் தடை: கடலூா் (கேப்பா் மலை)

SCROLL FOR NEXT