கலிபோர்னியாவில், இந்தியரின் நகைக்கடையில் 20 பேர் கொண்ட கும்பல் கொள்ளையடித்துள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணாத்தின், சன்னிவேலில் இயங்கிவரும் புணேவை தலைமையிடமாகக் கொண்ட பி.என்.ஜி. ஜுவல்லர்ஸ் என்ற நகைக்கடையில், முகமூடி அணிந்து வந்த 20 பேர் கொண்ட கும்பல் ஒன்று நுழைந்து நகைக்கடையில் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். கடையில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்ததில், 20 பேர் கொண்ட முகமூடி அணிந்த கும்பல், கடையின் கண்ணாடி கதவுகளை உடைத்து கடைக்குள் நுழைகின்றனர். உள்ளே நுழைந்ததும், நகைகள் வைக்கப்பட்டுள்ள அனைத்து மேசைகளையும் உடைக்கின்றனர். நகைகள் வைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு மேசைக்கும் தலா ஒருவர் என கொள்ளையர்கள் அனைவரும் பிரித்துக்கொண்டு கொள்ளையடித்துள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவம் முழுவதும் வெறும் 3 நிமிடங்களுக்கும் குறைவாகவே நடந்துள்ளது. இதன்மூலம், இந்த கொள்ளை சம்பவம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டும், கடையினை நோட்டமிட்டும் செயல்படுத்தப்பட்டுள்ளது தெளிவாகத் தெரிகிறது. இருப்பினும், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்புகள் பற்றிய தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.
பி.என்.ஜி. ஜுவல்லர்ஸ் புருஷோத்தம் நாராயண் என்பவரால் 1832-ல் தொடங்கப்பட்டது. கிட்டத்தட்ட 192 ஆண்டுகளாக இயங்கிவரும் பி.என்.ஜி ஜுவல்லர்ஸ், மொத்தம் 35 கிளைகளுடன் இயங்கி வருகிறது. அவற்றில் 33 கிளைகள் இந்தியாவிலும், அமெரிக்காவில் ஒரு கிளையும், துபையில் ஒரு கிளையும் செயல்பட்டு வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.