மணிப்பூர் பாதுகாப்பு நிலவரம் குறித்து உள் துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் அதிகாரிகளுடன் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜூன் 17) நடைபெற்றது.
தில்லியில் நடைபெற்ற இக்கூட்டத்தில் உள்துறை செயலாளர் அஜய் பல்லா, உளவுத்துறை தலைவர் தபன் டோ, ராணுவத் தளபதி மனோஜ் பாண்டே, மணிப்பூர் பாதுகாப்பு ஆலோசகர் குல்தீப் சிங், மணிப்பூர் தலைமை செயலாளர் வினீத் ஜோஷி, மணிப்பூர் டிஜிபி ராஜீவ் சிங் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
மணிப்பூர் கலவரத்தால் வடகிழக்கில் நிலவிவரும் சூழல் குறித்து மணிப்பூர் ஆளுநர் அனுஷியா உய்க், உள் துறை அமைச்சர் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு நேற்று (ஜூன் 16) எடுத்துரைத்தார். இதனைத் தொடர்ந்து இன்று உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மணிப்பூரில் மைதேயி - குகி ஆகிய இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டு அவ்வபோது வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
சமீபத்தில் மணிப்பூர் முதல்வர் பிரேம் சிங் தமாங் பாதுகாப்பு வாகனத்தில் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதற்கு முன்பு இரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வீடுகள் எரிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து மூண்ட கலவரத்தில் ஒருவர் கொல்லப்பட்டார்.
மேலும், சில இடங்களில் பாஜக முக்கிய தலைவர்கள் மேற்கொண்அ பிரசாரங்களிலும் மணிப்பூர் சம்பவத்தை குறிப்பிட்டு பாஜகவுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.