ராகுல் மீதான அவதூறு வழக்கு: ஜூன் 26-க்கு ஒத்திவைப்பு!
ராகுல் காந்தி மீது தொடரப்பட்டுள்ள அவதூறு வழக்கின் மீதான விசாரணை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்தியாராகுல் மீதான அவதூறு வழக்கு: ஜூன் 26-க்கு ஒத்திவைப்பு!
ராகுல் காந்தி மீது தொடரப்பட்டுள்ள அவதூறு வழக்கின் மீதான விசாரணை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக ராகுல் காந்தி மீது தொடரப்பட்டுள்ள அவதூறு வழக்கின் மீதான விசாரணை ஜூன் 26-க்கு ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த 2018ஆம் ஆண்டு, பெங்களூருவில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது பேசிய ராகுல் காந்தி, பாஜகவின் அப்போதைய தலைவராக பொறுப்பு வகித்த அமித் ஷா குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்ததாக புகார் எழுந்தது. இதனைத்தொடர்ந்து, பாஜக தலைவர் விஜய் மிஸ்ரா, கடந்த 2018ஆம் ஆண்டு ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு சுல்தான்பூரில் உள்ள எம்.பி, எம்எல்ஏ.,க்களுக்கான மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனிடையே ராகுல் தரப்பு வழக்குரைஞர் காஷி பிரசாத் சுக்லா நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அதில், மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதால், நீதிமன்றத்தில் ஆஜராவதில் அவகாசம் கோரப்பட்டது.
இதையடுத்து, ராகுலின் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பு வழக்குரைஞர் சந்தோஷ் குமார் பாண்டே, இந்த வழக்கை இன்று(ஜூன் 18)ல் விசாரிக்க பட்டியலிட்டதாகவும், ஆனால் சம்பந்தப்பட்ட நீதிமன்ற நீதிபதி விடுமுறையில் இருப்பதால் ஜூன் 26ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
முன்னதாக இந்த வழக்கில் கடந்த டிசம்பர் மாதம் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு எதிராக வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, பிப்ரவரி 20ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி அவர் ஜாமீன் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.