இந்தியா

பெண் காவலருக்கு பாலியல் வன்கொடுமை! உதவி ஆய்வாளர் கைது

தெலங்கானாவில் பெண் தலைமைக் காவலரை துப்பாக்கியைக் காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.

DIN

தெலங்கானாவின் ஜெய்சங்கர் பூபால்பள்ளி மாவட்டத்தில் உதவி ஆய்வாளர் ஒருவர் பெண் தலைமைக் காவலரை துப்பாக்கியைக் காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த நிலையில் காவல் துறை அதிகாரிகள் அவர் புதன்கிழமை கைது செய்தனர்.

தெலங்கானாவின் ஜெய்சங்கர் பூபால்பள்ளி மாவட்டத்தில் காளிஸ்வரம் காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமைப் பெண் காவலருக்கு அதே காவல் நிலையத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர் ஒருவர், ஜூன் 15 ஆம் தேதிவிருந்தினர் அறையில் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

இதுபற்றி அந்தப் பெண் காவலர் அளித்துள்ள புகாரில், உதவி ஆய்வாளர், தன்னை மீண்டும் மீண்டும் பின்தொடர்ந்து வந்ததாகவும், மேலும் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறியுள்ளார்.

இதுகுறித்து காவல் துறை உயர் அதிகாரிகள் கூறுகையில், “அந்தக் காவலரின் மீது ஐபிசி பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், இது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகிறது” என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

மும்பையில் பிரபல பள்ளியில் 4 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை: பெண் ஊழியர் கைது

போதைப்பொருள் கடத்தல் நாடுகள் பட்டியலில் இந்தியா! டிரம்ப் அறிவிப்பு!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது!

புர்ஜ் கலிஃபாவில் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து!

SCROLL FOR NEXT