இந்தியா

’கொல்கத்தா காவல்துறையால் எனக்கு பாதுகாப்பு இல்லை’: மேற்குவங்க ஆளுநர்!

கொல்கத்தா காவல்துறையினரால் தனது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக மேற்கு வங்க ஆளுநர் கூறியுள்ளார்.

DIN

ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் இருக்கும் கொல்கத்தா காவல்துறையினரால் தனது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக இன்று மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த் போஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஆளுநர் மாளிகை வளாகத்தை காலி செய்யுமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்ட சில நாட்களுக்குப் பிறகு அவர் இவ்வாறு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இப்போதும் காவல்துறையினர் ஆளுநர் மாளிகையில் பணியில் உள்ளனர்.

”தற்போது பாதுகாப்புப் பொறுப்பில் இருக்கும் காவல் அதிகாரி மற்றும் அவரது குழுவினர் எனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றனர் என்று நான் கூறுவதற்குக் காரணம் இருக்கிறது.

நான் இதுகுறித்து முதல்வர் மம்தா பானர்ஜிக்கு தகவல் தெரிவித்தேன். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்று அவர் பத்திரிகையாளர்களிடம் கூறினார்.

ஆளுநரின் பாதுகாப்புக்கு இருக்கும் காவல்துறையினர் கண்காணிப்பு விவகாரத்தில் கண்மூடித்தனமாக இருப்பதாகவும், அவர்கள் செல்வாக்கு மிகுந்த வெளிநபர்களின் பேச்சைக் கேட்டு நடப்பதை ஆளுநர் கண்டுபிடித்ததாகவும் ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

100 சதவீதம் தோ்ச்சி: அரசுப் பள்ளித் தலைமையாசிரியருக்கு பாராட்டு

தமிழகத்தின் முதல் அா்ச்சுனா் தவக்கோல நடுகல் கண்டெடுப்பு!

ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றவா் மின்சாரம் பாய்ந்து காயம்

மணல் கடத்தல்: மினி லாரி பறிமுதல்

திருத்தணி: சரவணப் பொய்கையில் 2-ஆம் நாள் தெப்பல் உற்சவம்!

SCROLL FOR NEXT