அதிஷியின் உண்ணாவிரதம் அரசியல் நாடகம்: தில்லி பாஜக தலைவர்
அதிஷியின் உண்ணாவிரதம்: தில்லி பாஜக தலைவர் விமர்சனம்
தில்லி அமைச்சர் அதிஷி மேற்கொண்டு வரும் உண்ணாவிரதப் போராட்டத்தை அரசியல் நாடகம் என்று பாஜக தலைவர் வீரேந்திரா சச்தேவா விமர்சித்துள்ளார்.
4 மணி நேரம் போராட்டம் நடத்திவிட்டு 18 மணி நேரம் ஏசி அறையில் தங்கியிருக்கும் கேஜரிவால் அரசின் புதிய சத்தியாகிரகம்தான் இது. தண்ணீர் திருட்டு உள்ளிட்ட பிரச்னைகளில் இருந்து கவனத்தை திசை திருப்பும் ஒரு அரசியல் நாடகம். ஹரியாணா முதல்வரிடம் பேசினேன். முழு அளவில்தான் தண்ணீர் வழங்குகிறது.
ஹரியாணா அரசு தேவைக்கு அதிகமாக தண்ணீர் விடுவதாக தில்லி அதிகாரிகளே பலமுறை ஏற்றுக்கொண்டுள்ளனர் என்றார். இதனிடையே தில்லி அமைச்சர் அதிஷி அளித்த பேட்டியில், "இது எனது உண்ணாவிரதத்தின் இரண்டாவது நாள். தில்லியில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. தில்லி அதன் அண்டை மாநிலங்களில் இருந்து தண்ணீர் பெறுகிறது.
ஹரியாணா அரசு தேவையான அளவு தண்ணீரை வழங்க ஒப்புக் கொள்ளாததால் உண்ணாவிரதத்தில் அமர்ந்துள்ளேன் எனக் கூறினார். தேசிய தலைநகா் தில்லிக்கு ஹரியாணா மாநிலத்திலிருந்து முறைப்படி தண்ணீா் வழங்கக் கோரி தில்லி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி ‘தண்ணீா் சத்தியாகிரக’ போராட்டத்தை வெள்ளிக்கிழமை தொடங்கினாா்.
தெற்கு தில்லியில் போகலில் அவர் மேற்கொண்டு வரும் காலவரையற்ற உண்ணாவிரம் இன்று(சனிக்கிழமை) இரண்டாவது நாளை எட்டியுள்ளது.