சூர்யகாந்த படேல் (கோப்புப் படம்) 
இந்தியா

பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் மத்திய அமைச்சர்!

முன்னாள் மத்திய அமைச்சர் சூர்யகாந்த படேல் பாஜகவின் உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார்

DIN

பாஜகவின் முன்னணி உறுப்பினரான சூர்யகாந்த படேல் பாஜகவிவின் உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

பாஜகவின் முன்னணி உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சூர்யகாந்த படேல், 2014ஆம் ஆண்டில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவில் இணைந்தார். இவர், ஹிங்கோலி மற்றும் நான்டெட் தொகுதிகளில் நான்கு முறை எம்.பி.யாகவும், ஒரு முறை எம்.எல்.ஏ.வாகவும் இருந்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஹிங்கோலி போட்டியிட விரும்பிய சூர்யகாந்த படேலின் வேட்புமனுவை நிராகரித்த பாஜக, அந்த தொகுதியினை ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனைக்கு வழங்கியது. இருப்பினும், ஷிண்டே ஹிங்கோலி தொகுதியில் தோல்வியை தான் பெற்றது. பாஜகவின் இந்த நடவடிக்கையால், அதிருப்தியடைந்த சூர்யகாந்த படேல் சமூக ஊடகங்களில் தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில், சூர்யகாந்த படேல் நேற்று (ஜூன் 22) பாஜகவில் இருந்து முதன்மை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்தார். ராஜிநாமாவை அறிவித்த பின்னர், ``கடந்த 10 ஆண்டுகளில் நான் நிறைய கற்றுக்கொண்டேன்” என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணிப்பேட்டை ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் முற்றுகை

நல்ல நாள் இன்று: தினப்பலன்கள்!

திருவள்ளுவா் பல்கலை.யில் இன்று பட்டமளிப்பு விழா

திருவள்ளூா்: குறைத்தீா் கூட்டத்தில் 362 மனுக்கள்

விளைபயிா்களை சேதப்படுத்திய ஒற்றை யானை விரட்டியடிப்பு

SCROLL FOR NEXT