மோடியின் ஒவ்வொரு செயலும் ஜனநாயகத்துக்கு எதிரானவை: காங். எம்பி பதிலடி!
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் ஜனநாயகம் அச்சுறுத்தலை சந்தித்து வருகின்றது.
இந்தியாமோடியின் ஒவ்வொரு செயலும் ஜனநாயகத்துக்கு எதிரானவை: காங். எம்பி பதிலடி!
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் ஜனநாயகம் அச்சுறுத்தலை சந்தித்து வருகின்றது.
அவசரநிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடியின் விமர்சனத்துக்கு காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பதிலடி கொடுத்துள்ளார்.
மக்களவைக்கு இன்று காலை வருகைதந்த பிரதமர் நரேந்திர மோடி, செய்தியாளர்கள் மத்தியில் பேசும்போது, அவசரநிலை பிரகடனத்தை குறிப்பிட்டு, அரசியல் சாசனம் துண்டு துண்டாக கிழிக்கப்பட்டு நாளையுடன் 50 ஆண்டுகள் ஆவதாக விமர்சித்திருந்தார்.
இதுகுறித்த நாடாளுமன்ற வளாகத்தில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் கேள்விக்கு பதிலளித்த மாணிக்கம் தாகூர் பேசியதாவது:
“இந்தியாவில் ஒவ்வொரு நாளும் ஜனநாயகம் அச்சுறுத்தலை சந்தித்து வருகின்றது. கடந்த 10 ஆண்டுகளில் மோடியின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் ஜனநாயக சக்திகளுக்கு எதிராகவே உள்ளது. நாடாளுமன்றத்தில் இருந்த காந்தி, அம்பேத்கர் சிலைகளைகூட அகற்றி வேறு இடத்தில் வைத்துள்ளனர். மக்களின் நம்பிக்கையை இழந்துள்ளனர். 302 இடங்களில் இருந்து 240ஆக குறைந்துள்ளனர்.” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், மக்களவை இடைக்காலத் தலைவர் நியமனம் குறித்து பேசிய அவர், “நாங்கள் அரசியலமைப்புக்காக நிற்கிறோம். இந்நாட்டின் அனைத்தும் அரசியலமைப்புதான் என்பதை அரசுக்கு நினைவூட்ட விரும்புகிறோம். அரசியலமைப்பை சீர்குலைக்கும் எவ்வித நடவடிக்கையும் பொறுத்துக் கொள்ளப்படாது. மக்களவை இடைக்காலத் தலைவர் நியமனம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைவருக்கு உதவும் குழுவில் இருந்து 3 மூத்த உறுப்பினர்கள் விலகிக் கொண்டனர்.” எனத் தெரிவித்தார்.