அரசமைப்பு சாசன புத்தகத்தை உயர்த்திப் பிடிக்கும் ராகுல் காந்தி  (உள்படம் | பதவியேற்கும் மோடி)
இந்தியா

மோடி பதவியேற்கும் தருணம்: அரசமைப்புப் புத்தகத்தை உயர்த்திப் பிடித்த ராகுல்!

மக்களவையில் சுவாரசியம்: மோடியை நோக்கி அரசமைப்புப் புத்தகத்தை உயர்த்திப் பிடித்த ராகுல் காந்தி..

DIN

மக்களவையில் சுவாரசிய சம்பவம் அரங்கேறியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஜூன் 24) மக்களவை உறுப்பினராக பொறுப்பேற்றபோது, சுவாரசிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

நாடாளுமன்றத்தின் 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. மக்களவை கூட்டத்தொடர் தொடங்கியவுடன் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலில் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்களவையின் இடைக்காலத் தலைவர் பா்த்ருஹரி மகதாப், எம்.பி.யாகப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

அப்போது ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் அரசமைப்புப் புத்தகத்தை தங்கள் கைகளில் உயர்த்திப் பிடித்தபடி மோடியை நோக்கி காண்பித்தனர்.

எனினும், அதனை ஒரு பொருட்டாக எண்ணாமல், தான் மக்களவை உறுப்பினராக பதவியேற்பதில் மட்டுமே மோடியின் கவனம் இருந்தது. இந்த காணொலி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“சிறுவயதிலேயே தமிழ் கற்றிருக்கலாம் என விரும்புகிறேன்!” பிரதமர் மோடி உரை! | Coimbatore

சபரிமலை தரிசனம்: 5000 பேருக்கு மட்டுமே ஸ்பாட் புக்கிங்!

வாரீ எனர்ஜிஸ் பங்குகள் 3% சரிவு!

தமிழக அரசு அனுப்பிய மெட்ரோ திட்ட அறிக்கையில் குறைகள்!

செமெரு எரிமலை வெடிப்பு! 54,000 அடி உயரம் வரை எழுந்த புகை! Indonesia

SCROLL FOR NEXT