18-வது மக்களவையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஓம் பிர்லாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஓம் பிர்லாவை வாழ்த்தி பிரதமர் மோடி பேசியதாவது:
மக்களவையின் சார்பாக உங்களுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். அமிருத காலத்தில் இரண்டாவது முறையாக இப்பதவியில் நீங்கள் அமர்ந்திருப்பது கூடுதல் பொறுப்பாகும். உங்களின் அனுபவத்தின் மூலம் அடுத்த 5 ஆண்டுகள் எங்களை வழிநடத்துவீர்கள் என்று நம்புகிறொம். உங்கள் முகத்தில் உள்ள சிரிப்பால் மக்களவை மகிழ்ச்சியாக இருக்கும். இரண்டாவது முறையாக மக்களவைத் தலைவரானதே சாதனை. பல்ராம் ஜாகருக்கு பிறகு நீங்கள்தான் இரண்டாவது முறையாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்.
சுதந்திரம் அடைந்து 70 ஆண்டு காலத்தில் நடக்காத பணிகள் உங்கள் தலைமையில் இந்த அவையால் சாத்தியமானது. ஜனநாயகத்தின் நீண்ட பயணத்தில் பல மைல்கற்கள் வருகின்றன. 17-வது மக்களவை சாதனைகளால் நாடு பெருமை கொள்ளும் என்பதில் நம்பிக்கை உள்ளது.” எனத் தெரிவித்தார்.
நாட்டில் முதல்முறையாக மக்களவைத் தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. இதுவரை ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த நிலையில், இம்முறை இந்தியா கூட்டணி சார்பில் கொடிக்குன்னில் சுரேஷ் வேட்பாளாராக நிறுத்தப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு மக்களவைத் தலைவராக ஓம் பிர்லா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.