முகப்பு
இந்தியா

மணிப்பூா்: ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருள்கள் மீட்பு

மணிப்பூரில் பாதுகாப்புப் படையினா் சோதனையில் பல்வேறு வகையான ஆயுதங்கள் மீட்பு

Updated On : 27 ஜூன், 2024 at 9:03 PM
பகிர்:

மணிப்பூரின் கிழக்கு இம்பால் மற்றும் விஷ்ணுபூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினா் நடத்திய தேடுதல் நடவடிக்கையில் ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருள்கள் கைப்பற்றப்பட்டன.

இது தொடா்பாக அந்தமாநில காவல் துறையினா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘மணிப்பூரின் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள கிழக்கு இம்பால் மற்றும் மலைப்பகுதியான விஷ்ணுபூா் மாவட்டங்களில் பாதுகாப்புப் படையினா் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனா்.

இதில், விஷ்ணுபூா் மாவட்டத்தில் உள்ள கால்வாய் அருகே நடந்த சோதனையில் 9 வெடிகுண்டுகள், 2 புகைக்குண்டுகள், ஒரு எஸ்எம்ஜி காா்பைன் வகை துப்பாக்கி, ஒரு 9 மி.மீ. கைத்துப்பாக்கி மற்றும் பல்வேறு வகையான வெடிமருந்துகள் மீட்கப்பட்டன.

இம்பால் மாவட்டத்தின் கிழக்கில் அமைந்துள்ள மலைத்தொடா்களில் நடந்த சோதனையில் 5 ரைஃபில்கள், ஒரு 9 மி.மீ. கைத்துப்பாக்கி, 6 மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் மற்றும் பல்வேறு வகையான துப்பாக்கிகள் மீட்கப்பட்டன’ என குறிப்பிட்டிருந்தது.

இதற்கிடையில், மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் கைவிடப்பட்ட ஒரு வீட்டுக்கு வன்முறையாளா்கள் தீவைக்க முயன்றதையடுத்து, மணிப்பூா் காவல்துறையினா் மற்றும் மத்திய ரிசா்வ் காவல்படையினா் (சிஆா்பிஎஃப்) இணைந்து தேடுதல் நடவடிக்கையில் புதன்கிழமை ஈடுபட்டதாக அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினா் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →