முகப்பு
இந்தியா

முதல்வரின் கருத்து- குப்பைப் பொருள்: விமர்சித்த ஆளுநர் அலுவலகம்!

முதல்வரின் கருத்துக்கு ஆளுநர் அலுவலகம் கடும் எதிர்வினை

Updated On : 28 ஜூன், 2024 at 10:08 AM
மம்தா பானர்ஜி (கோப்புப் படம்)
பகிர்:

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆளுநரின் அலுவலகத்துக்கு செல்வதற்கு பெண்களிடம் பயம் நிலவுவதாக கூறிய கருத்தை மறைமுகமாக குறிப்பிட்டு அதற்கு எதிர்வினையாற்றியுள்ளது அம்மாநில ஆளுநர் சி.வி.ஆனந்த போஸின் அலுவலகம்.

புதிதாக தேர்வு செய்யப்பட்ட கட்சியின் இரு எம்.எல்.ஏக்கள் உறுதிமொழி ஏற்பதில் குழப்பம் நிலவுவதையடுத்து முதல்வர் மம்தா பானர்ஜி இந்த கருத்தை வெளிப்படுத்தினார்.

பராநகர் தொகுதி சயந்திகா பானர்ஜி மற்றும் பகவங்கோலா தொகுதி ரேயத் ஹவுசன் சர்க்கார் ஆகிய இருவரும் எம்எல்ஏக்களாக தேர்வு செய்யப்பட்டதையடுத்து அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்துவைக்க ஆளுநர் சட்டப் பேரவைக்கு வருவதோ அல்லது அவைத் தலைவர், துணை அவைத்தலைவர் அதனை செய்வதோதான் சரியென முதல்வர் மற்றும் சர்க்கார் தெரிவித்துள்ளனர்.

ராஜ் பவனில் முன்பு என்ன நடந்ததோ அதனால் பெண்கள் அங்கு செல்லப் பயப்படுகிறார்கள். நான் இது குறித்து நேரடியாக புகார்களை பெற்றுள்ளேன் என மம்தா பானர்ஜி வியாழக்கிழமை தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை பிற்பகல் ஆளுநர் அலுவலகம் கடுமையாக முதல்வரின் கருத்துகளை மறைமுகமாக குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது குறித்து, ஆளுநர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்றைய செய்தித் தாள்களில் வெளியாகியுள்ள முதல்வரின் தீங்கிழைக்கும்வகையிலான விமர்சனம் குறித்து, இந்த அபத்தான சூழ்ச்சியை கண்டுகொள்வதோ அல்லது குப்பைப் பொருளுக்கு பதிலளிப்பதோ பொருத்தமற்றது என ராஜ் பவன் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →