மகாராஷ்டிர மாநிலத்தில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை குறைத்து அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
மும்பை நகரத்தில் டீசல் வரியை 24 சதவீதத்தில் இருந்து 21 சதவீதமாக குறைப்பதாக மகாராஷ்டிர அரசு வெள்ளிக்கிழமை அறிவித்தது, இதனால் டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் வரியை 26 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால், மும்பை, நவி மும்பை மற்றும் தாணே உள்பட மும்பை பகுதியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 65 பைசா குறைக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவார் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்து, பெட்ரோல் மற்றும் டீசலுக்கான வரி குறைப்பு அறிவிப்பை வெளியிட்ட நிலையில், பெட்ரோல் மற்றும் டீசலின் விலை குறைக்கப்பட்டுள்ளது.
மும்பையில் இன்று (ஜூன் 28) பெட்ரோல் விலை ரூ. 104.21 ஆகவும் டீசல் விலை 92.15 ஆகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.