இந்தியா

மோகத்தால் ரூ. 1.2 லட்சம் மோசடி!

தில்லியில் டேட்டிங் செயலி மூலம் ரூ.1.2 லட்சம் மோசடி

DIN

தில்லியில் டேட்டிங் செயலி மூலம் ரூ.1.2 லட்சம் மோசடி செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

தில்லியில் சிவில் தேர்விற்கு படித்துவரும் போட்டித்தேர்வாளர் ஒருவர், டிண்டர் என்ற டேட்டிங் செயலி மூலம் வெர்ஷா என்ற பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமையில் (ஜூன் 23) வெர்ஷா, தன்னுடைய பிறந்தநாளினைக் கொண்டாடுவதற்காக அந்த போட்டித்தேர்வாளருக்கு அழைப்பு விடுத்துள்ளார். அவரும் வெர்ஷாவின் அழைப்பினை ஏற்றுக்கொண்டு, விகாஸ் மார்க்கில் உள்ள பிளாக் மிரர் கஃபே என்ற விடுதிக்கு சென்றுள்ளார். அங்கு சென்று, இருவரும் பிறந்தநாளினைக் கொண்டாடியுள்ளனர்.

பின்னர், விடுதிக்கான கட்டணத்தினைச் செலுத்துவதற்காக அவர் சென்றபோது ரூ.1.2 லட்சத்திற்கான கட்டணத்தினைக் செலுத்துமாறு விடுதி நிர்வாகத்தினர் கேட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், தான் சில ஆயிரங்களுக்கு மட்டுமே விடுதியில் புழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் விடுதி நிர்வாகம் கட்டணத்தினைக் கண்டிப்பாக செலுத்தவேண்டும் என்று அவரை மிரட்டியுள்ளனர். இதனால், அவரும் வேறுவழியின்றி முழுக்கட்டணத்தினையும் விடுதி உரிமையாளரான பாஹ்வா என்பவரிடம் செலுத்தியுள்ளார்.

இருப்பினும் அவர் காவல்துறையில் இந்த சம்பவம் குறித்து, விடுதி நிர்வாகத்தின் மீது புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் பாஹ்வாவை கைது செய்துள்ளனர்.

பாஹ்வாவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அந்த விடுதியானது வான்ஷ் பாஹ்வா மற்றும் அவரது நண்பர் அன்ஷ் குரோவர் ஆகியோருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. மேலும், வெர்ஷா என்ற அந்த பெண்ணும் அவர்களுடைய கூட்டாளி என்பதும் தெரியவந்துள்ளது. விடுதியில் மேலாளராகப் பணிபுரியும் ஆர்யன் என்பவர் தான் வெர்ஷாவை, பாதிக்கப்பட்ட அந்த போட்டித்தேர்வாளருடன் டிண்டர் செயலி மூலம் போலியான கணக்கை உருவாக்கி, அவருடன் பழகவைத்து ஏமாற்றியுள்ளார்.

வெர்ஷாவின் உண்மையான இயற்பெயர் அஃப்சான் பர்வீன் என்பதும் தெரியவந்தது. இந்த வகையான மோசடி மூலம் கிடைக்கும் தொகையில், அந்த பெண்ணிற்கு 15 சதவிகிதமும், உதவும் மேலாளர்களுக்கும் பணியாளர்களுக்கும் 45 சதவிகிதமும், மீதமுள்ள 40 சதவிகிதம் உரிமையாளர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, வேறொரு விடுதியில் மும்பையைச் சேர்ந்த வேறொருவருடன் இருந்த வெர்ஷாவை காவல்துறையினர் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சசிகுமாா், ஆா்யன் தோல்வி; காலிறுதியில் 3 இந்திய இணைகள்

அனிஷுக்கு வெண்கலம்

இங்கிலாந்தை வீழ்த்தியது மேற்கிந்தியத் தீவுகள்

ககன்யான் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் - குரூப் கேப்டன் சுபான்ஷு ஷுக்லா

பட்ஜெட் தாக்கல் தேதி விரைவில் முடிவு செய்யப்படும் - கர்நாடக முதல்வர் சித்தராமையா

SCROLL FOR NEXT